Jailer2: ஜெய்லர் 2- வேற லெவல் மாஸ் காட்டும் ரஜினி !

ரஜினி-நெல்சன் காம்போவில்  உருவான ஜெய்லர் படம் கடந்த 2023ம் ஆண்டு வெளியானது. பிரமாண்ட வெற்றிப்பெற்ற இந்த படம் உலகளவில் ₹600 கோடிக்கு மேல் வசூலில் சாதனை படைத்தது. 

படையப்பாவை தொடர்ந்து நீண்ட இடைவெளிக்கு பிறகு ரஜினி, ரம்யா கிருஷ்ணன், கன்னட நடிகர் சிவ்ராஜ்குமார், மோகன்லால், ஜாக்கி ஷெராப் காம்போ ரசிகர்களின் வரவேற்பை பெற்றது.

ஜெய்லர் வெற்றியை தொடர்ந்து அடுத்த பாகம் இயக்க நெல்சன் திலீப்குமார் திட்டமிட்டிருந்தார். இந்நிலையில் ரசிகர்களை கொண்டாட வைத்த ஜெய்லர்  படத்தின் அடுத்த பாகம் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது. 

ஜெய்லர் 2 படத்தின் அப்டேட்டை சன்பிக்சர்ஸ் வெளியிட்டுள்ளது. சன்பிக்சர்ஸ் தயாரிக்கும் ஜெயிலர் 2படத்தை நெல்சன் இயக்க அனிருத் இசையமைக்கிறார். 

படக்குழு வெளியிட்டுள்ள டீசரில், ரஜியின் மாஸ் எண்ட்ரி ரசிகர்களை இன்னொரு சம்பவக்துக்கு ரெடி என பையர் ஏற்றியுள்ளது. 

Source : https://x.com/sunpictures/status/1879143937803513942?t=q8Efz9HXx4ZijYeUqJ7ipA&s=19