வடகொரிய வீரர்களை வைத்து காய் நகர்த்தும் உக்ரைன்! கையை பிசையும் ரஷ்யா!

 

கீவ்: ரஷ்யா-உக்ரைன் போர் தீவிரமடைந்திருக்கும் நிலையில், போர்க்களத்தில் இருந்த வடகொரிய வீரர்களை உக்ரைன் கைது செய்திருக்கிறது. தற்போது அவர்களை வைத்து ரஷ்யாவுடன் டீலிங்கை தொடங்கியுள்ளது.

நேட்டோதான் உக்ரைன்-ரஷ்யாவுக்கு நடுவே நடக்கும் போருக்கு காரணம். உக்ரைனுக்கு அமெரிக்கா ஆயுத உதவிகளை செய்வதை போல, ரஷ்யாவுக்கு வடகொரிய ஆட்கள் உதவியை செய்து வருகிறது.

காய் நகர்த்தும் உக்ரைன்: சுமார் 10 லட்சம் வடகொரிய வீரர்கள், ரஷ்யாவுக்காக உக்ரைனுடன் சண்டை போட்டு வருகிறார்கள். இவர்களில் சிலரை உக்ரைன் ராணுவம் கொன்றிருக்கிறது. அதேபோல பதிலுக்கு உக்ரைன் வீரர்களையும் வடகொரிய ராணுவம் போட்டு தள்ளியிருக்கிறது. இப்படி இருக்கையில் சில வடகொரிய வீரர்களை உக்ரைன் உயிருடன் கைது செய்திருக்கிறது. அவர்களை நாங்கள் உயிருடன் விட வேண்டும் எனில், ரஷ்யா பிடித்து வைத்திருக்கும் எங்கள் நாட்டு வீரர்களை விடுவிக்க வேண்டும் என்று உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி வலியுறுத்தியுள்ளார். தப்பு கணக்காய் போன ரஷ்யாவின் திட்டம்:

உலகின் மிகப்பெரிய நாடு ரஷ்யா. ஆனால் அதன் எல்லையை பாதுகாக்கும் அளவுக்கு அதனிடம் மக்கள் தொகை இல்லை. வெறும் 14 கோடி பேர்தான் அந்நாட்டில் வசிக்கிறார்கள். எனவே, ராணுவத்திற்கு என 15 லட்சம் பேரைதான் சேர்க்க முடிந்திருக்கிறது. இது இந்த போரில் உக்ரைனுக்கு ப்ளஸ் பாயிண்ட்டாக இருக்கிறது.

இது ரஷ்யாவுக்கும் தெரியும். எனவேதான் வடகொரியாவை கையில் போட்டுக்கொண்டு, அங்கிருந்து ஆட்களை இறக்கியது. ஆனால் அந்த ஆட்கள் இப்படி உக்ரைன் வசம் மாட்டுவார்கள் என்று எதிர்பார்க்கவில்லை. இதன் மூலம் கைது செய்யப்பட்ட உக்ரைன் வீரர்களை விடுவிக்க வேண்டிய கட்டாயம் ரஷ்யாவுக்கு ஏற்பட்டிருக்கிறது. ஆக புதின் போட்ட கணக்கு தப்பாக போயிருக்கிறது. அடுத்து என்ன நடக்கும்?:

இப்போது வடகொரிய வீரர்களை ரஷ்யா காப்பாற்றியே ஆக வேண்டும். ஏனெனில், வடகொரிய மக்களுக்கும், அந்நாட்டு அதிபர் கிம் ஜாங் உன்-க்கும் புதின் மீது நல்ல மரியாதை இருக்கிறது. ஆக உக்ரைன் கேட்கும் வீரர்களை கொடுத்து அனுப்பிவிட்டு, கைது செய்யப்பட்டிருந்த வடகொரிய வீரர்களை ரஷ்யா கேட்டு வாங்கும். இப்படி ரஷ்யா வரும் வீரர்களுக்கு முழு உடல் பரிசோதனை நடத்தப்படும். அவர்கள் தகுதியானவர்களாக இருப்பின், மீண்டும் போர் களத்திற்கு அனுப்பப்படுவார்கள். எப்படி இருந்தாலும் வடகொரிய வீரர்களை ரஷ்யா மீட்டு விடும் என்றே சர்வதேச அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். போருக்கு என்ன காரணம்:

முன்னரே சொன்னதை போல, போருக்கு நேட்டோதான் காரணம். நேட்டோவை சோவியத் ரஷ்யாவுக்கு எதிராக அமெரிக்காதான் உருவாக்கியிருந்தது. ஆனால் சோவியத் உடைந்த பிறகு, நேட்டோ கலைக்கப்படவில்லை. அது ஐரோப்பிய நாடுகளை இணைத்துக்கொண்டது. நேட்டோவில் இணைந்துவிட்டால், உங்களுக்கு ஒரு பிரச்சனை எனில் நேட்டோ உறுப்பு நாடுகள் வரும். இதுதான் அதன் ஃபார்முலா. 

எனவே, சோவியத் யூனியனின் ஒரு பகுதியாக இருந்து, தற்போது உடைந்து போயுள்ள நாடுகளை நேட்டோ இணைத்துக்கொண்டே வருகிறது. அதில் ஒன்றுதான் உக்ரைன். உக்ரைன், ரஷ்யாவின் பக்கத்து நாடு. உக்ரைன் நேட்டோவில் இணைவதை ரஷ்யா தொடக்கத்திலிருந்து எதிர்த்து வந்தது. காரணம், நேட்டோ வந்துவிட்டால், அது ரஷ்யாவின் எல்லையில் நேரடியாக நிற்கும். அது ரஷ்ய மக்களுக்கு அச்சுறுத்தல். எனவேதான் உக்ரைனுக்கு எதிராக ரஷ்யா போரை அறிவித்தது என்பது குறிப்பிடத்தக்கது.