தீ அணைக்கும் படை போல வேஷம் போட்டு திருட்டு :LA Fire: எரியும் வீட்டில் களவெடுக்கும் கள்வர்:

அமெரிக்க லாஸ் ஏஞ்சல் நகரில் எற்பட்டுள்ள தீயை இன்றுவரை கட்டுப்படுத்த முடியவில்லை. அங்கே ஒரு பகுதியில், உலகின் முக்கிய புள்ளிகள் பலர் தமது சொகுசு பங்களாக்களை வாங்கி விட்டுள்ளார்கள். இந்த வீடுகளுக்கு உள்ளே பல விலை உயர்ந்த பொருட்கள் உள்ளது. இதனை சிலர் தமக்கு சாதகமாகப் பயன்படுத்தி வருகிறார்கள். தீ அணைக்கும் படை போல பலர் வேடமிட்டு, இந்தப் பகுதிக்குச் சென்று, எரிந்துகொண்டு இருக்கும் வீட்டின் உள்ள எஞ்சிய விலை உயர்ந்த பொருட்களை களவாடிச் செல்ல ஆரம்பித்துள்ளார்கள்.

இதில் நூற்றுக் கணக்கானவர்கள் ஈடுபட்டுள்ளார்கள். இதனை கண்டறிந்த மேயர், உடனடியாக ராணுவ உதவியைக் கோரியுள்ள நிலையில். அங்கே ராணுவம் பாதுகாப்புக்குச் சென்றுள்ளது. இதனை அடுத்து பொலிசார் பல கள்வர்களை கைது செய்து வருகிறார்கள். அங்கே உண்மையில் யார் தீ அணைப்புப் படை, யார் கள்வர்கள் என்று கண்டு பிடிப்பதே பெரும் சிரமமாக இருப்பதாக மேயர் அறிவித்துள்ளார்.