கடந்த 4 நாட்களுக்கு முன்னர், லண்டன் பெட்ஃபேட் நகரில், பஸ் நிலையம் ஒன்றில் நின்றிருந்த 17 வயது மாணவனை, 5 பேர் கொண்ட கும்பல் ஒன்று சுற்றிவளைத்து கத்தியால் குத்தியது. இந்தச் செய்தியை நாம் ஏற்கனவே பிரசுரித்து இருந்தோம். அன்றைய தினம், கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டவர் நபர், தொமஸ் டெய்லர்(17) என்று பொலிசார் தெரிவித்துள்ளார்கள். மேலும் கொலைச் சந்தேக நபர்களான 3 பேரை பொலிசார் கைது செய்து விசாரனை நடத்தியதோடு. அவர்கள் மீது குற்றப் பத்திரிகை தாக்கல் செய்துள்ளார்கள்.
இதேவேளை அன்றைய தினம் கத்திக் குத்துச் சம்பவத்தோடு தொடர்புடைய மேலும் 2 இளைஞர்கள் தலைமறைவாகியுள்ளார்கள். இவர்களை தேடும் பணியை பொலிசார் முடிக்கி விட்டுள்ளார்கள். சம்பவ தினத்தன்று இவர்கள் அனைவரும் வீதியில் ஓடும் காட்சி CCTV ல் பதிவாகி இருந்தது. இவர்கள் அனைவரும் குல்லா போட்டு இருந்தார்கள். இருப்பினும் பொலிசார் மோப்பம் பிடித்து சரியான நபர்களை கைதுசெய்துள்ளார்கள் என்பது உண்மையில் ஆச்சரியமான விடையம்.
லண்டனில் கத்தி, வாள், துப்பாக்கி போன்ற ஆயுதங்களை கையில் வைத்திருந்தாலே 5 வருட சிறைத் தண்டனை என்ற கடுமையான சட்டம் உள்ளது. இருப்பினும் லண்டன் வீதிகளில் கத்திக் குத்தும் கொலைகளும் குறைந்த பாடாக இல்லை. கடந்த 5 வருடங்களில் இது போன்ற சம்பவங்கள் 230% மடங்கால் அதிகரித்துள்ளதாக ஒரு அறிக்கை மேலும் தெரிவிக்கிறது.