வடகொரியா சிப்பாய்கள் ரஷ்யாவுக்கு எதிரா ? தலைவில் வெடி குண்டை வைத்து சாய்ந்து கிடக்கிறார்கள் !

 

உக்ரைன் போரில் ரஷ்யாவின் பக்கம் போராடும் வடகொரிய சிப்பாய்கள், ரஷ்ய இராணுவத்தின் பொருட்களைத் திருடியதோடு, தலைவர் கிம் ஜோங்-உனின் கண்ணியத்தைக் காப்பாற்றத் தவறியதாக பரபரப்பூட்டும் புகார்கள் வெளியாகியுள்ளன. CNN வெளியிட்ட ஒரு ஆவணப்படி, வடகொரிய அதிகாரி ஒருவர் எழுதியதாகக் கருதப்படும் குறிப்புகளில் இந்த விவரங்கள் உள்ளன. இதில், “திருட்டு” போன்ற “கற்பனைக்கு அப்பாற்பட்ட அவமானகரமான செயல்கள்” மற்றும் கட்டளைகளை மீறியது குறித்து பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த புகார்களின் உண்மையான தன்மை அல்லது ஆதாரங்களை Express-UK சுயாதீனமாக உறுதிப்படுத்த முடியவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ரஷ்யாவின் போரில் ஈடுபட்டுள்ள ஒரு வடகொரிய சிப்பாய், தனது தனிப்பட்ட நலன்களை “முதலிடத்தில் வைத்து” உச்ச தளபதி (கிம் ஜோங்-உன்) கண்ணியத்தைக் காப்பாற்றத் தவறியதாக இரண்டாவது குறிப்பு தெரிவிக்கிறது. இதோடு, உக்ரைன் படைகளால் சுற்றி வளைக்கப்பட்டால், தங்கள் தலையில் வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்து கொள்ளும் வடகொரிய சிப்பாய்களின் கோரமான உத்திகள் பற்றியும் இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. உக்ரைன் படைவீரர் ஒருவர் ஒரு வடகொரிய சிப்பாயின் உடலை இழுத்துப் பார்க்க, அவர் தலையருகே வெடிகுண்டைப் பற்றவைத்துக் கொண்டு கத்திய வீடியோ ஒன்று இருப்பதாகவும், அது சரிபார்க்கப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உக்ரைன் படைவீரர் ஒருவர் (போக்கிமான் என்ற அழைப்புச் சின்னத்துடன்) கூறியதாவது, “அவர்கள் வெடிகுண்டுகளைப் பயன்படுத்துகிறார்கள், அதாவது தங்களைத்தாங்களே வெடிக்கச் செய்யத் தயாராக உள்ளனர்… சரணடையச் சொல்லி அழைத்த போதிலும், அவர்கள் போராடுவதைத் தொடர்வார்கள்.” மற்றொரு படைவீரர், கூறியதாவது, வடகொரிய சிப்பாய்களுக்கு ஒரு லிட்டர் தண்ணீர் மட்டுமே வழங்கப்படுகிறது, கூடுதல் குளிர் ஆடைகள் இல்லை எனத் தெரிவித்துள்ளார்.

2022ல் பீரங்கி குண்டுகளை அனுப்புவதன் மூலம் உக்ரைன் போரில் ரஷ்ய தலைவர் புடினுக்கு வடகொரியா ஆதரவைத் தொடங்கியது. ரஷ்யாவில் படைத்துறை பற்றாக்குறை மற்றும் புதிய ராணுவ மொபிலைசேஷனைத் தொடங்க தயக்கம் காரணமாக, கடந்த ஆண்டு இறுதியில் 10,000 முதல் 11,000 வடகொரிய சிப்பாய்கள் இந்தப் போரில் சேர்ந்ததாக நம்பப்படுகிறது.

source : Express UK