மாலை கைதாகி, அதே மாலை வேளை, அதுவும் சில மணி நேரத்தில் விடுதலையாகியுள்ளார் அர்ச்சுணா MP. இதனை வழமை போல எமது YouTube-வாசிகள், “நடுத் தெருவில் நாயைப் போல அர்ச்சுணாவை அழைத்துச் சென்ற பொலிஸ்” – “சிங்களப் பொலிசாரின் அராஜகம்” அப்படி இப்படி என்று எழுதி, தமது சேனலின் TRP ரேட்டை எகிறவைக்க, மறு முனையில் நீதிமன்றில் 2 லட்சம் ரூபாவை கட்டி விட்டு , சிம்பிளாக வெளியே வந்த அர்ச்சுணா. அங்கே நின்ற ஆதரவாளர்களிடம் 3ம் திகதி வாங்கோ…கட்டாயம்… வாங்கோ வீடியோ எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
அவரை அழைத்துச் செல்ல அவரது “குஞ்சு” வந்திருந்தது. தயவு செய்து தப்பான வார்த்தை என்று கருதி விடாதீர்கள். குஞ்சு என்பது அவரது 3வது மனைவி, சீ இல்லை… இல்லை காதலி… வேண்டாம் கட்டப் போற மனைவி என்று வைச்சுக் கொள்ளுவம். அர்ச்சுணா MP செய்யும் ஒவ்வொரு லீலையையும் வைரலாக்குவது இந்த குஞ்சு தான். எப்படி போட்டால் வீடியோ எகிறும் என்பதில் PHD முடித்தவர் குஞ்சு. அது தான் அர்சுணா MP தன் காதலியை குஞ்சு என்று செல்லமாக அழைக்கிறார்.
இவர்கள் YouTube மற்றும் இன்ஸ்டா கிராமத்தில் (நகரம் அல்ல கிராமத்தி) வாழ்ந்து வருகிறார்கள். இவர்கள் உலகமே வலைப் பதிவு தான். இதனைப் பார்க்கும் தமிழர்கள் மேலும் மேலும் வாக்குகளைப் போட எமது அரசியல் என்பது கேலிக் கூத்தாக மாறியுள்ளது. தமிழ் நாட்டில் ஒருவர் ஆமைக் கறி பற்றி கதை அளக்க, இங்க இவர்.. குஞ்சோடு திரிய, தமிழர்களின் தலை விதி இப்படித் தான் போகப் போகிறது போல இருக்கே ? யப்பா…. யாராவது இருக்கிறீர்களா இல்லையா ? ஒரு நல்ல தலைவர் வர மாட்டாரா ?