நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர், சீமானை மன நல மருத்துவர் பரிசோதனை செய்யவேண்டும் என்று மதுரை உயர்நீதிமன்றில் வழக்கு ஒன்று பதிவுசெய்யப்பட்டுள்ளது. 2009ம் ஆண்டுக்கு முன்னர், அவர் அரசியலை ஆரம்பித்தவேளை, தந்தை பெரியார் வழியே தனது வழி என்று கூறியதும். அதன் பின்னர் கூட பகுத்தறிவு தந்தை பெரியார் தன்னுடைய ஆசான் என்றும் மேடைகளில் கூறிவந்தார். இதற்கு பல ஆதார வீடியோக்கள் உள்ளது. ஆனால் திடீரென.. பெரியாரை இழிவாகப் பேசி வருகிறார்.
ஒரு மேடையில் ஒரு கருத்தையும், அடுத்த மேடையில் முன்னர் பேசியதற்கு மாறு பட்ட கருத்தையும் அவர் வெளிப்படுத்தி வருவதால். சீமானுக்கு ஹலூசினேஷன்() என்ற ஒரு வகை மன நோய் இருக்கக் கூடும் என்ற சந்தேகங்கள் எழுந்துள்ளது. பிறருக்கு நடந்த சம்பவங்களை தனக்கு நடந்தாக அவர்கள் எண்ணுவார்கள். தாம் அறிந்தும் கேட்ட விடையங்களையும் தமக்கு நடந்தது போல நினைத்துக் கொள்வார்கள். இது ஒருவகையான மன நோய் ஆகும்.
இதனை ஆரம்பத்தில் கண்டறிந்தால், நிச்சயம் குணப்படுத்த முடியும். அந்த வகையில் சீமானை மன நல மருத்துவர் ஒருவர் பரிசோதனை செய்வது நல்லது என்றும். அவர் பலரை பிழையான பாதையில் வழி நடத்திச் செல்வதாகவும், மக்கள் கருதுகிறார்கள்.