BREAKING NEWS: வடக்கு பிரதேச சபைகளில் 60க்கு மேற்பட்ட ஆசனங்களை கைப்பற்றவுள்ள JVP !

வடக்கில், யாழ், நல்லூர், பளை, கோப்பாய் என்று பல பிரதேச சபைகளில் JVP கட்சியே முன் நிலை வகிக்கிறது. கடந்த நாடாளுமன்ற தேர்தலைக் காட்டிலும், நடக்கவுள்ள பிரதேச சபை தேர்தலில் வடக்கில் JVP கட்சிக்கு மேலும் ஆதரவு பெருகியுள்ளது, என்ற அதிர்ச்சிய கருத்துக் கணிப்பை அதிர்வு இணையம்  கண்டறிந்துள்ளது.  ஒரு பிரதேச சபையில் 6 ஆசனங்களைப் பெற்றால், அவர்களுக்கு மேலதிகமாக 4 ஆசனங்கள் கிடைக்கும். மேயர் மற்றும் துணை மேயரை கட்டுப்படுத்தும் அளவுக்கு இவர்களுக்கு ஆசனங்கள் செல்லப் போகிறது.

இதேவேளை தமிழர்கள் பல கட்சியாக சிதறி உடைந்து உள்ளதால், எஞ்சியுள்ள தமிழர்களின் கட்சிக்கு, 3 தொடக்கம் 2 ஆசனங்கே பிரதேச சபையில் கிடைக்க வாய்புகள் உள்ளது. இதே போக்கு நீடித்தால்.. மாகாண சபைத் தேர்தலிலும் JVP கட்சியே பெரும் வெற்றிபெறும். 

இலங்கை பிரித்தானியர்களிடம் இருந்து சுதந்திரம் வாங்கியதில் இருந்து, தமிழர்கள் இதுபோல ஒரு சிங்கள கட்சிக்கு தமது வாக்குகளை போட்டதே இல்லை என்று சொல்லலாம். ஆனால் அது நடக்கிறது. இதற்கு காரணம் தமிழ் அரசியல்வாதிகளே. இவர்களுக்கு இடையே ஒற்றுமை என்று இல்லை. இலங்கையில் மிஞ்சி இருப்பதே சில லட்சம் தமிழர்கள் தான். ஆனால் தமிழ் நாட்டில் உள்ளது போல 100 கட்சிகள் இருக்கிறது. இப்படி ஒரு ஆபத்து தமிழர் பகுதியில் இருக்க… எங்கே சிங்களவர் கையில் எமது ஆட்சியே போய் விடுமோ என ஈழத் தமிழர்கள் ஏங்கிக்கொண்டு இருக்க,  அங்கே ஒரு அமையன் தனக்கு 35KG ஆமை இறைச்சி தந்தார்கள். என்று சொல்வதோடு மட்டுமல்லாது !

நானே ஈழத் தமிழரின் காவலன் என்று கூறி வருகிறார். பார்ப்போம்.. நடைபெறவுள்ள தேர்தலில் வட கிழக்கு தமிழர்களே…. ! தமிழ் கட்சிக்கு வாக்குப் போடுங்கள் என்று அறிவித்தல் ஒன்றை விடட்டும் பார்ப்போம். விட மாட்டாரே… அவர் தான் சிங்களத்தின் மற்றும் மத்திய அரசின் செல்லப் பிள்ளையாச்சே… எப்படி விடுவார் ? சீமான் ?