Vodafone நிறுவனம் மொபைல் தொழில்நுட்பத்தில் புரட்சிகர முன்னேற்றம் ஒன்றை அறிவித்துள்ளது. இந்த முன்னேற்றத்தின் மூலம், பூமியின் குறைந்த சுற்றுப்பாதையில் (Low Earth Orbit) உள்ள செயற்கைக்கோள்களைப் பயன்படுத்தி, நேரடியாக மொபைல் சிக்னல்களை அனுப்ப முடியும் என வோடாஃபோன் தெரிவித்துள்ளது.
இதன் மூலம், பூமியின் எந்த மூலையிலும் மொபைல் இணைப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சில வேளைகளில் நீங்கள் வீட்டிற்கு உள்ளே இருந்தால், சிக்னல் குறைவாக கிடைக்கும் அல்லாவா. இந்தப் பிரச்சனை இனி இருக்காது.
இந்த திட்டம், விண்வெளி மற்றும் தொலைதொடர்பு துறைகளின் ஒருங்கிணைப்பைக் காட்டுகிறது. வோடாஃபோன், ஆஸ்டிரியன் நிறுவனமான டெலிகாம் மற்றும் ஜப்பானிய நிறுவனத்துடன் இணைந்து இந்த முன்னேற்றத்தை அடைந்துள்ளது. இந்த தொழில்நுட்பம், எதிர்காலத்தில் விண்வெளி மற்றும் பூமியின் தொலைதொடர்பு தேவைகளை பூர்த்தி செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த முன்னேற்றம், விண்வெளி மற்றும் தொழில்நுட்பத் துறையில் ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்கும் என்பதில் சந்தேகமில்லை. கூடவே எலான் மஸ்கின் ஸ்டார் லிங் வலையமைப்பை இது பின் தள்ளும் என்றும் கூறப்படுகிறது.