பாருங்கள் இந்த வீடியோவை: ரயில் நிலையத்தில் தன்மீது முட்டி விட்டதால் இன் நபர் செய்யும் கொடூரத்தை

பிரன்ஸ் நாட்டில் உள்ள லியோன் நகரில் உள்ள என்னும் மெற்றோ ரயில் நிலையத்தில் நடந்த சம்பவம். CCTVல் தெளிவாக பதிவாகியுள்ளது. ஒரு நபர் ரயிலில் இருந்து இறங்கி மெற்றோ நிலையத்தில் இருந்து வெளியே செல்ல படிக்கட்டை ஏற வருகிறார். மற்றைய நபர் ரயில் ஏற்ச் செல்கிறார். ரயில் ஏறச் சென்ற நபர் இவரை தற்செயலாக முட்டி விட்டுச் செல்ல. அதனால் கடுப்பாகிய இந்த நபர் உடனே பாக்கெட்டில் இருந்த கத்தியை எடுத்துச் சென்று, அவர் கழுத்தின் பின் பகுதியில் குத்தியுள்ளார். 

குத்துவாங்கிய நபர் தற்போது உயிரோடு உள்ளார் என்பது பெரிய அதிசயாமன விடையம் என்கிறார்கள் மருத்துவர்கள். கத்தியால் குத்திய நபர், சடுதியாக எதுவுமே நடக்காதது போல அங்கிருந்து சர்வசாதாரணமாக வெளியேறிவிட்டார். பொலிசார் கடுமையாக வலை வீசி இவரை தேடி வருகிறார்கள். 

குறித்த நபர் வேறு நாட்டு உளவாளியாக இருக்க கூடும். இல்லையேல் மிகவும் ஆபத்தான ஒரு நபராக இருக்க வேண்டும். தற்செயலாக தன்னை இடத்த நபரை கழுத்தில் கத்தியால் குத்தும் அளவு அவர் ஏன் செல்லவேண்டும் ?

பொதுவாக வேற்று நாட்டு உளவாளிகள் தான் இப்படிச் செய்வது வழக்கம். அவர்கள் மீது யாராவது மோதினால் தம்மிடம் உள்ள பொருட்களை களவாட இப்படிச் செய்கிறார்கள் என்று அவர்கள் சந்தேகப்படுவது உண்டு. மேலும் ஒரு ரயில் நிலையத்தில், பலருக்கு மத்தியில் இப்படி கத்தியால் குத்த , அவருக்கு தைரியம் எப்படி வந்தது என்ற கேள்விகளும் எழுகிறது அல்லவா ?