இங்கிலாந்தில் மரண தண்டனையை மீண்டும் கொண்டு வர வேண்டும் மக்களின் ஒருமித்த கருத்து !

ஒரு புதிய கருத்துக் கணிப்பின்படி, இங்கிலாந்தில் மரண தண்டனையை மீண்டும் கொண்டு வர வேண்டும் என்று பெரும்பான்மையான மக்கள் கருதுகின்றனர். பொது அபிப்பிராய  Think Tank மோர் இன் காமன் நடத்திய இந்த கணிப்பு, தொடர் கொலை மற்றும் கொடிய பயங்கரவாத தாக்குதல்கள் போன்ற கொடூரமான குற்றங்களுக்கு மரண தண்டனையை பிரிட்டிஷ் மக்கள் ஆதரிப்பதாக காட்டியுள்ளது.

2023 இல் மோர் இன் காமன் கடைசியாக இந்த கருத்துக் கணிப்பை நடத்தியபோது 50 சதவீதமாக இருந்த பொது ஆதரவு, இப்போது 55 சதவீதமாக அதிகரித்துள்ளது என்று The Times தெரிவித்துள்ளது. மூன்று குழந்தைகளைக் கொன்ற அக்செல் ருடகுபானாவுக்கு தண்டனை வழங்கப்பட்ட பின்னர், மரண தண்டனையை மீண்டும் கொண்டு வர வேண்டுமா என்பது குறித்து விவாதங்கள் நடந்த பின்னர் இந்த புதிய கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டது.

இந்த கொலைகாரன்,  17 வயதில் தனது கொடூரமான கத்திக் குத்துத் தாக்குதலில் பெபே கிங் (6), எல்சி டாட் ஸ்டான்கோம் (7) மற்றும் ஆலிஸ் டா சில்வா அகுயர் (9) ஆகியோரைக் கொன்றான். இதன் காரணமாக அவனுக்கு ஆயுள் தண்டனை கொடுக்கப்பட்டது..

18 வயதான ருடகுபானா, கடந்த வாரம் பிரிட்டனின் மிக மோசமான சிறைகளில் ஒன்றான, தென்கிழக்கு லண்டனில் உள்ள பெல்மார்ஷ் சிறையில் 52 ஆண்டுகள் தண்டனை அனுபவிக்கத் தொடங்கினான். அவனது பாதுகாப்பிற்காக அவன் தனிமைப்படுத்தப்பட்டான்.