லண்டனில் அடுத்த சம்பவம்: Police Car திரத்த ஓடிய அகதி இளைஞர் தாதியின் இடுப்பை உடைத்த கொடுமை !

லண்டனில் தாதி ஒருவரின் காரில் உள்ள டாஷ் காம் என்ற கமராவில் தெளிவாக பதிவாகியுள்ளது. படு வேகமாக வந்த கார் ஒன்று, தாதியின் காரின் பின்னால் மோதி, குறித்த பெண்ணின் காரை பலமாக தாக்கியுள்ளது. இதனால் அவர் சடுதியாக முன் நொக்கிச் சென்றதில், அவரது விலா எலும்பில் முறிவு ஏற்பட்டு தற்போது அவசர சிகிச்சைப் பிரிவில் உயிருக்கு போராடி வருகிறார். 

Al Soaimi, என்ற 19 வயது இளைஞரே, பொலிஸ் திரத்த தனது காரை நிறுத்தாமல் வேகமாகச் சென்று இறுதியில் கட்டுப்பாட்டை இழந்து இந்த தாதியின் காரின் பின்னால் மோதியுள்ளார்.

தற்போது பார்த்தால் முஸ்லீம் நாடுகளில் இருந்து வந்த பல அகதிகள், லண்டனில் கடத்தல், கொள்ளை, கஞ்சா போதைப் பொருள் என்று பல குற்றங்களில் ஈடுபட்டு வருகிறார்கள். இவர்கள் பலரிடம் விசா இல்லை. இதனால் இவர்களுக்கு பயமும் இல்லை. ஏற்கனவே இவர்கள் மறைந்து வாழ்ந்து வருகிறார்கள்.

கடந்த திங்கள் அதிகாலை லண்டன் நோத்ஹால்ட்டில் ரைசிலிப் வீதியில் இது போல ஒரு சம்பவம் நிகழ்ந்து, ரஞ்சன் என்ற ஈழத் தமிழர் பரிதாபமாக உயிரிழந்தது ஞாபகம் இருக்கும்.