பூஜா ஹெக்டே நடித்த தேவா படத்திற்கு ஒரு வழியா U/A சான்றிதழ் கிடைத்து விட்டது

தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி திரைப்படங்களில் தனது நடிப்புக்காக அறியப்படும் நடிகை பூஜா ஹெக்டே, சூர்யாவுடன் ‘ரெட்ரோ’ திரைப்படத்தில் நடித்துள்ளார். 

தற்போது விஜய் நடிப்பில் ‘ஜன நாயகன்’ படத்தில் பணியாற்றி வருகிறார். இந்தியில், ஷாஹித் கபூருடன் இணைந்து நடிக்கும் ‘தேவா’ படம் இந்த மாதம் 31ம் தேதி வெளியாக உள்ளது. இந்த படத்தை ரோஷன் ஆண்ட்ரூஸ் இயக்கியுள்ளார்.

சின்சார் போர்டு, படத்தை மதிப்பாய்வு செய்த பிறகு, பூஜா ஹெக்டே நடித்த ஒரு முத்தக்காட்சிக்கு ஆட்சேபனை தெரிவித்தது. மேலும், சில ஆபாச வசனங்கள் மற்றும் சில காட்சிகளுக்கும் அவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். 

படத்தின் குழு இந்த கருத்துகளை ஏற்று தேவையான மாற்றங்களைச் செய்தது. இந்த மாற்றங்களுக்குப் பிறகு, படத்திற்கு யு/ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.