யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு இருந்த இலங்கை தமிழரசு கட்சியின் முன்னாள் தலைவர் மாவை சேனாதிராஜா சற்று முன்னர் காலமானார். கடைசி காலத்தில் அவர் அரசியல் அநாதை ஆக்கப்பட்டு இருந்தார்.
அவரைக் கவனிக்க கூட ஆட்கள் இல்லை. தலையில் மூளைக்கு உள்ளே பெரும் கட்டி ஒன்று அவருக்கு வளர்ந்து இருந்தது. அதனை சத்திர சிகிச்சை மூலம் அகற்ற முடியாத நிலை காணப்பட்டது.
நேற்றைய தினம்(28) அவரை பாராமரித்த மருத்துவர்கள், அவர் இன்னும் 48 மணி நேரமே உயிருடன் இருப்பார் என்று தெரிவித்த நிலையில் இன்று அவர் இறந்து விட்டார். தலையில் இருந்த கட்டி வெடித்ததால் மூளை செயல் இழந்து அவர் இறந்து விட்டதாக தற்போது கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.
கடைசி நேரங்களில் அவர் ஆசைபட்ட விடையம் ஒன்று தான். மாவை தனது மகனை அரசியலுக்கு கொண்டு வர வேண்டும் என்று நினைத்திருந்தார். அது பலிக்காமல் போய் விட்டது. 1942 ஆண்டு ஒக்டோபர் மாதம் 27 ஆம் திகதி பிறந்த மாவை சேனாதிராஜா தனது 82 வது வயதிலேயே காலமானார்.
இறுதி நேரத்தில் அனைவரும் அவரை கை விட்டு இருந்தார்கள் என்பதே உண்மை. தமிழ் தேசிய பரப்பில் பாராளுமன்ற உறுப்பினராக இருந்து, கட்சியின் தலைவராக இருந்து பல பொறுப்புகளில் இருந்தவர். ஆனால் வயது போனால் எவர் தான் மதிக்கிறார் என்ற நிலை தான் அவருக்கும். இது ஒரு துயரமான சம்பவம் ..