கடந்த 5 வருடங்களான நாங்கள் பெரும் துன்பத்தில் இருக்கிறோம். எப்பொழுது பார்த்தாலும் கூக்குரல், பெரும் சத்தம், யோகா பாடம் எடுக்கிறேன் என்று கூறி அந்த ஏரியாவையே அமைதியில்லாமல் ஆக்கிவிட்டார் Kristyna Robinson, என்று அயலவர்கள் விரக்த்தியில் இருந்தார்கள்.
பல முறை பொலிசாரிடம் முறையிட்டும் பயன் இல்லை. இறுதியாக அயலவர்கள் நீதிமன்றத்தை நாடியுள்ளார்கள். Kristyna Robinson எதிராக வழக்கு தொடரப்பட்டது.
யோகா என்றால், அமைதியாக மனதை ஒரு நிலைப் படுத்தி செய்யும் ஒரு ஆசனம். ஆனால் இவர் ஏன் தன்னிடம் வரும் ஆட்களை கத்த வைக்கிறார் என்பது தான் தெரியவில்லை என்று நீதிபதி கேட்டுள்ளார்.
இதற்கு எந்தப் பதிலையும் அவரால் கூற முடியவில்லை. கடைசியாக அயலவர்களிடம் பல விடையங்களை கேட்டுத் தெரிந்துகொண்ட நீதிபதி, யோகா டீச்சருக்கு 15,000 ஆயிரம் தண்டப் பணம் கட்டவேண்டும் என்ற தீர்ப்பை வழங்கியுள்ளார். லண்டனில் உள்ள West Hampstead என்னும் இடத்தில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சில தமிழ் ரிச்சர் மாரும் வீட்டில் வைத்து வகுப்புகளை எடுத்து வருகிறார்கள். எனவே ஜாக்கிரதை. அயலவர்கள் கூடி ஏதாவது பிரச்சனை தந்தால் இப்படித் தான் முடியும்.