விடுதலைப் புலிகளின் உளவுப் பிரிவில், பொட்டு அம்மானுக்கு கீழ் வேலை பார்த்த சிரஞ்சீவி மாஸ்டர் தமிழகத்தில் இருக்கிறார் என்ற தகவலை இந்திய Q பிரிவு பொலிசாருக்கு போட்டுக் கொடுத்ததே சீமானின் நாம் தமிழர் கட்சி உறுப்பினர் தான் என்பது TV நிகழ்ச்சி ஒன்றின் ஊடாக வெளியிடப்பட்டுள்ளது. ஈழத்தில் போர் உக்கிரமடைந்த கால கட்டத்தில், ராமேஸ்வரத்தில் இருந்து, மன்னாருக்கு மருந்து மற்றும் அத்தியவசிய பொருட்களை கொண்டுவரும் ஆப்பரேஷனுக்கு பொறுப்பாக சிரஞ்சீவி மாஸ்டர் இருந்தார்.
2009ம் ஆண்டுக்குப் பின்னர் சீமான் தலைவர் பிரபாகரனின் படத்தை காட்டி அரசியல் செய்ய ஆரம்பித்தவேளை, சிரஞ்சீவி மாஸ்டரிடம் இருந்து பல உதவிகளையும், தவகல்களையும், திட்டமிடல்களையும் பெற்றார் சீமான். ஆனால் நாளடைவில் சீமான் செய்யும் சில காரியங்கள் பிழையானவை என்று, சிரஞ்சீவி மாஸ்டர் சொல்ல ஆரம்பிக்க. அவரை தமிழக Q பிரிவு பொலிசாரிடம் மாட்டி விட்டுள்ளது, சீமானின் நாம் தமிழர் கட்சி முக்கியஸ்தர்கள். இதேவேளை பாருங்கள்…
தற்போது தமிழ் நாட்டில் சீமான் மீது 4 வழக்குகள் போடப்பட்டுள்ள நிலையில். அவர் இன்று வரை கைதாகவில்லை. ஏன் என்ற காரணம் கேட்டால் தலை சுற்றும். இவரைக் கைது செய்ய வேண்டாம் என்று மத்திய உள்துறை அமைச்சர் பொலிஸ் DGP க்கு அறிவுறுத்தி உள்ளார். அந்த வகையில் சிமான் BJPக்கு விலை போய் பல நாட்கள் ஆகிறது. மேலும் சொல்லப் போனால் சீமான் என்கிற மனிதர் RAW அமைபின் பிடியில் இருக்கும் வாய்ப்புகளும் அதிகம்.
எனவே தமிழர்களே மிகவும் ஜாக்கிரதை. வெளிநாடுகளில் நீங்கள் கொடுக்கும் பணம், உங்கள் பெயர் முகவரிகள், இடம் , அனைத்து தகவல்களையும் RAW அமைப்பு கண்காணித்து வருகிறது என்பது பொருள்.