திருநங்கைகள் இனி அமெரிக்க படையில் இருக்க முடியாது: டொனால் ரம் அதிரடி !

ஆணாக இருந்து பெண்ணாக மாறியவர், பெண்ணாக இருந்து ஆணாக மாறிய எவரும் அமெரிக்க ராணுவப் படையில் இருக்க முடியாது என்ற புது சட்டத்தை அதிபர் டொனால் ரம் கொண்டு வருகிறார். இதற்கான பிரத்தியேக உத்தரவை அவைர் இன்னும் சில மணி நேரத்தில் பிறப்பிக்க உள்ளார். இதனால் அமெரிக்காவில் பெரும் களோபர நிலை தோன்றியுள்ளது.

இதனை இடது சாரிகள் கடுமையாக எதிர்க்கும் அதேவேளை. பொது மக்களும் இதனை எதிர்த்து வருகிறார்கள். பாலின மாற்றம் என்பது தற்போது உலகில் ஒரு சாதாரண விடையம். ஒரு ஆண் தான் பெண் என உணர்ந்து கொண்டால், பாலின மாற்றம் செய்யலாம். இது ஹார்மோன்களின் பிழையே தவிர மனிதரில் அல்ல. 

இந்த உணர்வைக் கூட புரிந்துகொள்ளாமல், மதத்தை மட்டும் நம்பும் டொனால் ரம், இப்படியான கடுமையான முடிவை எடுத்து வருகிறார். வாக்குப் போட்ட மக்கள் , இனி தான் சிந்திக்க வேண்டி இருக்கும்.