நேற்று(27) திங்கட் கிழமை அதிகாலை 4.40 மணிக்கு , லண்டன் நோத்ஹால்ட்டில்( NORTHOLT ) படு பயங்கரமான விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளது. இதில் 47 வயதுடைய ஈழத் தமிழரான ரஞ்சன் என்பவர் உயிரிழந்துள்ளார். 4 பாக்கிஸ்தான் இளைஞர் ஒரு BMW காரை வேகமாக ஓட்டிச் சென்றவேளை. ரைசிலிப்( Ruislip Road ) வீதியில் வைத்து பொலிசார் அதனைக் கவனித்துள்ளார்கள். இதனை அடுத்து பொலிசார் குறித்த BMW காரை மறிக்க முற்பட்டவேளை. Met Police launch investigation into fatal collision in Northolt
அந்தக் காரில் இருந்தவர்களை காரை நிறுத்தாமல் படுவேகமாக காரை ஓட்ட ஆரம்பித்துள்ளார்கள். இதனால் பொலிசாரும் திரத்த ஆரம்பித்துள்ளார்கள். அந்தவேளை BMW காரில் சென்ற இளைஞர்களால், காரை கட்டுப்படுத்த முடியவில்லை. எதிரே வந்த கார் மீது(FORD FOCUS) மோதியுள்ளார்கள். அதில் பயணித்த 47 வயதுடைய ரஞ்சன் என்னும் தமிழர் சிகிச்சை பலன் இன்றி மரணித்துள்ளார்.
BMW காரில் பயணித்த 4 இளைஞர்களில், பின் சீட்டில் இருந்த 2 இளைஞர்கள் காரை விட்டு இறங்கி ஓடித் தப்பிவிட்டதாகவும். முன்னால் அமர்ந்திருந்த இளைஞர் மற்றும் BMW காரை ஓட்டிய சாரதியை மட்டுமே பொலிசார் கைது செய்துள்ளார்கள். அவர்களையும் மருத்துவமனையில் பொலிசார் அனுமதித்துள்ள அதேவேளை.
அவர்களுக்கு பெரிதாக காயம் எதுவும் இல்லை எனப் பொலிசார் அதிர்வு இணையத்திற்கு தெரிவித்துள்ளார்கள். குறித்த பாக்கிஸ்தான் இளைஞர்கள் போதைப் பொருளை காரில் வைத்திருந்ததாக, கூறப்படுகிறது. இருப்பினும் பொலிசார் இது பற்றி எதனையும் சொல்ல, விரும்பவில்லை.
ரஞ்சனின் ஆத்மா சாந்தியடைய நாமும் இறைவனை பிரார்த்திப்போமாக. ஓம் ஷாந்தி ஷாந்தி !