தன்னுடைய உறவினர் ஒருவரை, போலியான பணியாளராக நியமித்து. அவரது சம்பள காசை எடுத்து தன்னுடைய சொந்த தேவைக்காக செலவு செய்தேன் என்று ஒப்புக்கொண்டுள்ளார், யாழ் மாவட்ட MP அர்ச்சுணா. தேர்தல் நடைபெற்று இன்னும் 3 மாதங்கள் கூட பூர்த்தியாகாத நிலையில். இப்படியான தில்லாலங்கடி வேலை செய்து அப்பட்டமாக மாட்டியுள்ளார் அர்ச்சுணா MP.
பாராளுமன்றத்தால் மாதம் தோறும் 56,000 ரூபா இவருக்கு செலவுக்காக கொடுக்கப்படுகிறது. ஆனால் நான் தூர இடத்தில் இருந்து வருகிறேன் என்று கூறி, 2 லட்சத்தி 75,000 ரூபாவை இவர் பெற்றுள்ளதோடு. போதாக் குறைக்கு, தனக்கு உதவிக்கு மற்றும் ஆராட்சி செய்ய ஒருவர் தேவை என்ற போர்வையில், தனது உறவினரை நியமித்து. அவருக்கு சம்பளக் காசை பாராளுமன்றம் ஊடாகப் பெற்று மோசடி செய்துள்ளார்.
இவை அனைத்துமே தற்போது கண்டு பிடிக்கப்பட்டுள்ள நிலையில். இதனை நேரடியாக ஒப்புக்கொண்டுள்ளார் அர்ச்சுணா MP. சிங்கள இணையங்கள் இவரைக் கிழி கிழி என்று கிழித்து தொங்கவிட்டுள்ளது. இவர் எப்படி மற்றவர்களைப் பார்த்து ஊழல் செய்கிறார்கள் என்று பேச முடியும் என்று கேள்வி கேட்டுள்ளது பல ஊடகங்கள். மொத்தத்தில் தமிழர்களின் மானத்தை காற்றில் பறக்கவிட்டுள்ளார் அர்ச்சுணா MP.
அர்ச்சுணா MP யின் அண்ணாவின் மகன், அறிவன்பன் என்பவரையே இவர் வேலைக்கு அமர்த்தியதாக கூறி நாடகம் ஆடியுள்ளார்.