எட்டு வயது சிறுவன் அமீர் ஹார்டன் தாயை காப்பாற்ற முயன்று தந்தையின் துப்பாக்கியால் சுடப்பட்டு பரிதாபகரமாக உயிரிழந்தான். 29 வயதான செரிஷ் எட்வர்ட்ஸை நோக்கி(அம்மா) தந்தை சுடுவதற்கு சில நொடிகளுக்கு முன்பு, அமீர் குறுக்கே ஓடியதால் முதுகெலும்பில் குண்டு பாய்ந்து உயிரிழந்தான்.
இந்த துயரமான நாளை நினைவுகூர்ந்த செரிஷ்(அம்மா), அவர் என்னை சுடப்போகிறார் என்று எனக்குத் தெரியும். அவர் திரும்பி என்னை நோக்கி சுட்டார். தோட்டா ஒலி மிகவும் உரத்ததாக இருந்தது. என் காதுகள் ஒலித்தன. நாங்கள் ஒருவரையொருவர் பார்த்தோம், நான் சரிந்து விழவில்லை. ‘அம்மா, அமீர் இறந்துவிட்டார்’ என்று என் மகள் சொன்னபோது தான் அவர் என்னைக் காப்பாற்ற ஓடிவந்ததை உணர்ந்தேன்என்று தெரிவித்தார்.
அன்று இரவு மணி 12 மணியளவில், செரிஷ் தூங்கிக்கொண்டிருந்தபோது ஹார்டன் அவள் அறைக்குள் நுழைந்தார். இருவரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். செரிஷ் கூறுகையில், “அமீர் அறைக்குள் ஓடிவந்து, அவர் கத்துவதை நிறுத்தும்படி கெஞ்சினான். நான் அமீரிடம் ‘நீங்கள் இப்போது வெளியேற வேண்டும்’ என்று சொன்னேன்.
இதேவேளை எனது கணவர் மேல் வீட்டுக்கு ஓட ஆரம்பித்தார் “நான் அவரைப் பின்தொடர்ந்து மேலே ஓடினேன்”, அவர் தனது துப்பாக்கியை எடுப்பதைப் பார்த்தேன். நான் ‘நீங்கள் என்ன செய்கிறீர்கள்?’ என்று கேட்டேன், ஆனால் அவர் ‘போதும்’ என்று சொல்லிக்கொண்டிருந்தார். நான் அவருடன் துப்பாக்கிக்காகப் போராடினேன்.” இதற்குள் அமீரின் நான்கு சகோதரர்களும் விழித்துக்கொண்டு கத்திக்கொண்டிருந்தனர்.
செரிஷ் கூறுகையில், “நான் அவரிடம் ‘அமீர், நீங்கள் வெளியேற வேண்டும். நீங்கள் அண்டை வீட்டுக்குச் செல்ல வேண்டும் – நான் நன்றாக இருக்கிறேன்’ என்று சொன்னேன். ஆனால் அவன் அம்மாவை (என்னை) பாதுகாக்கவே முற்பட்டான். விலகிச் செல்லவில்லை.
சிறுவனை சுட்டார், பின்னர் தன்னைத்தானே சுட்டுக்கொண்டார் அப்பா. இந்த சோகமான சம்பவம் 2024ல் இடம்பெற்றது. ஆனால் பொலிசார் தற்போது தான் முழு விபரங்களையும் வெளியிட்டுள்ளார்கள்.