அமெரிக்க அதிபர் டொனால் ரம் போட்ட திட்டம் கசிந்துள்ளது. இதனால் பல தகவல்கள் வெளியாகியுள்ளது. உக்ரைனுக்கு இனி ஆயுதங்களை கொடுக்க முடியாது என்பது, ரம்பின் முடிவு. இதனால் போரை முடிவுக்கு கொண்டுவர வேண்டும்.
எனவே ஈஸ்டர் கொண்டாட்டத்தில் வைத்து, உக்ரைன் அதிபரோடு பேசி, அவரை போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொள்ள வைப்பது. அதன் பின்னர், ரஷ்யா பிடித்த பகுதிகளை, தற்காலிகமாக ரஷ்யாவே வைத்திருப்பது. ஆனால் உக்ரைன் ரஷ்யாவுக்கு உள்ளே பிடித்து வைத்திருக்கும் கேஷ் என்னும் பகுதியை உடனே ரஷ்யாவுக்கு விட்டுக் கொடுப்பது.
இது போல ரஷ்யாவுக்கு ஆதரவாக பல திட்டங்களை கொண்டு வந்து, அதனூடாக ரஷ்ய அதிபர் புட்டினை போர் நிறுத்தம் ஒன்றுக்கு ஒப்புக் கொள்ள வைப்பது என்பதே ரம்பின் திட்டமாக உள்ளது. இது போக, அமெரிக்கா நயா பைசா கூட கொடுக்காது. ஆனால் ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் பிரிட்டன் ஆகிய நாடுகள் உக்ரைனுக்கு சுமார், $486 B பில்லியன் டாலர்களை, கொடுக்க வேண்டுமாம். இதனை 10 ஆண்டு திட்டத்தில் கொடுத்து. உக்ரைனை மீள கட்டி எழுப்புவது.
அப்படி என்றால் ஐரோப்பியர்கள் என்ன ஏமாளிகளா ? ஐரோப்பிய மக்களின் வரிப் பணம் இப்படிச் செலவு செய்யப்படப் போகிறது என்ற விடையம் தற்போது கசிந்துள்ளது. இதனை உக்ரைன் அதிபர் ஜிலன்ஸ்கி எதிர்பார்க்கவில்லை. கசிந்த ஆவணங்கள் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
காரணம் ஐரோப்பிய ஒன்றியம் உக்ரைனுக்கு கொடுக்க உள்ள பணம் தான். இந்த அளவு பணத்தை ஐரோப்பிய ஒன்றியம் கொடுக்க வேண்டும் என்று அமெரிக்கா அழுதம் கொடுக்க உள்ளதோடு. இனி உக்ரைன் நேட்டோ நாடுகள் கூட்டில் இணைய வாய்ப்பே இல்லை என்று ரம் உறுதியாக முடிவை எடுத்து விட்டதாகவும் கூறப்படுகிறது.