எப்படி இருந்த நான் இப்படி ஆகிட்டேன் என்பது போல, பெண்கள் மட்டும் அல்ல ஆண்களே பார்த்து ஆசைப்படும் அளவிற்கு, அழகாகவும், உடல் கட்டோடும் இருந்த பாடகர் ஜஸ்டின் பீபர் சமீபத்தில் ஒரு சூப்பர் மார்கெட்டுக்கு முன்னால் சென்றவேளை எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று காட்டுத் தீ போல பரவி வருகிறது.
ஜஸ்டின் பீபர் சோர்வாகவும், களைப்பாகவும், கண்கள் வறண்டு, வெறித்துப் பார்ப்பது போன்ற புகைப்படங்கள் வெளியானதைத் தொடர்ந்து, அவரது உடல்நிலை குறித்து ரசிகர்கள் இந்த கவலை தெரிவித்தனர்.
“நெட்டிசன்கள்” அவரது தற்போதைய தோற்றத்திற்கு புதிய தந்தையாக இருப்பது அல்லது திருமண உறவில் விரிசல் பற்றிய வதந்திகள் காரணமா என்று பல்வேறு கருத்துக்களை தெரிவித்தனர்.
DailyMail.com பல மருத்துவ நிபுணர்களுடன் இது குறித்து பேசியது. அவரது தோற்றத்திற்கு என்ன காரணமாக இருக்கலாம், அல்லது வேறு ஏதேனும் தீவிர உடல்நலப் பிரச்சினை இருக்கிறதா என்பது குறித்து நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
டாக்டர் கௌரவ் பார்தி DailyMail.com இடம் ஜஸ்டின் பீபரின் தோற்றத்தில் மிகவும் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் அவரது தலைமுடி குறைதல், முகத்தில் பொலிவு குறைதல், சுருக்கங்கள் மற்றும் கருவளையங்கள் உருவாகி இருப்பது . இயற்கை வயதாகுதல், மன அழுத்தம், ஊட்டச் சத்து, எடை இழப்பு மற்றும் தோல் பராமரிப்பு பழக்கங்கள் உள்ளிட்ட பல காரணிகளால் ஏற்படலாம் , என்று தெரிவித்துள்ளதோடு.
இதேவேளை ஜஸ்டின் பீபருக்கு பாலியல் நோய் ஏதவது ஏற்பட்டு இருக்க வாய்ப்புகள் உள்ளது என்ற வதந்திகளும் கூடவே பரவ ஆரம்பித்துள்ளது. பேரும் புகழும் உள்ள ஒருவரைப் பற்றி இவ்வாறு பல வதந்திகள் பரவுவது சகஜம் தானே…