கனடாவின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, டொனால்ட் டிரம்புடன் நடத்திய நெருக்கடி பேச்சுவார்த்தைகளுக்கு பிறகு, கட்டண விதிப்பு இடைநிறுத்தம் மற்றும் பில்லியன் டாலர் எல்லை பாதுகாப்பு நடவடிக்கைகளை முன்னெடுப்பதாக அறிவித்துள்ளார்.
புதிய தொழில்நுட்பம் மற்றும் பணியாளர்களை எல்லைப் பகுதியில் அமர்த்துவதுடன், 1.3பில்லியன் டாலர்கள் செலவில், அமெரிக்காவுக்குள் யாரும் ஊடுருவாத வண்ணம் தமது படைகள் பார்த்துக் கொள்ளும் என்றும் கனடா அதிபர் தெரிவித்துள்ளார்.
புதிய ஹெலிகாப்டர்கள், தொழில்நுட்பம் மற்றும் பணியாளர்களுடன் எல்லையை பலப்படுத்துதல், அமெரிக்க பங்காளர்களுடன் ஒருங்கிணைப்பை மேம்படுத்துதல் ,என்று டொனால் ரம் விதித்த பல நிபந்தனைகளை ரூடோ ஏற்றுக்கொண்டுள்ளார்.
இதனால் கனடா பொருட்களுக்கு அதிபர் ரம் விதிக்க இருந்த 25% வரியை ரம் இடை நிறுத்தியுள்ளதாக அறிவித்துள்ளார். பல உலக நாடுகளை ரம் தற்போது அடி பணிய வைத்துள்ளார் என்று தான் கூறவேண்டும். தான் சொல்லும் விடையத்தை செய்யா விட்டால், 25% விகித வரி உயர்வு என்று பயம் காட்டியே பல தலைவர்களை அடிபணிய வைத்து வருகிறார் ரம்.