ஆதரவு குறைய ஆரம்பிக்க: பாலச்சந்திரனையும் சந்திக்கு இழுக்கும் சீமான் வெட்கக்கேடு !

 தமிழ் நாட்டில் உள்ள ஈரோட்டில், இடத்தேர்தல் நடக்கிறது. அங்கே நாம் தமிழர் கட்சி சார்பாக சீதாலட்சுமி போட்டியிடுகிறார். அவருக்கு வாக்குச் சேகரிக்க சீமார் நேற்றைய தினம்(03),  சென்று பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அங்கே அவர், விடுதலைப் புலிகளின் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் கடைசி மனைப் பற்றிப் பேசி, அனுதாப அலை ஒன்றை பெற முயற்ச்சி செய்த விடையம், மிகவும் கீழ் தரமான நடவடிக்கை என்று மக்களால் விமர்சிக்கப்படுகிறது. 

இது போக இந்திய அரசின் உத்தரவின் பேரில் தான் பாலச்சந்திரன் கொல்லப்பட்டதாக சீமான் மேடையில் பேசினார்.. ஈரோடு இடைத்தேர்தலில், இவர் வாக்கு சேகரிக்க ஏன் பாலச்சந்திரனை இழுக்க வேண்டும் என்று மக்கள் சமூக வலையத் தளங்களில் கேள்வி எழுப்பி வருகிறார்கள். 

ஈரோடு இடைத் தேர்தலில், ப.ஜ.க கட்சி சீமானுக்கு போட்டியாக இல்லை. அது போல காங்கிரசும் இல்லை. முக்கிய போட்டியாக,  தி.மு.க மற்றும் அதிமுக கட்சிகளே உள்ளது. இன் நிலையில் மத்திய அரசு கொலை செய்தது என்று சீமான் பேசி என்ன பயன் ? 

ஆனால் சீமான் பாலச்சந்திரனையும் சந்திக்கு இழுத்து, அந்தச் சிறுவனையும் ஒரு காட்சிப் பொருள் ஆக்கிவிட்டார். தேர்தலில் வாக்குகளை பெற எத்தனையோ வழிகள் உள்ளது. இதில் ஏன் ஈழத் தமிழர்களை அடமானம் வைக்கவேண்டும் ? இது எல்லாம் ஒரு பிழைப்பா ?