தமிழ் இளைஞர்கள் 9,000 பேர் பொலிஸ் அதிகாரிகளாக பொறுப்பேற்கலாம் – அனுரா தெரிவிப்பு !

யாழ். மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்ட நேற்று(31) நடைபெற்றவேளையில் அதிபர் அனுரா, நாட்டில் 30,000 அரச வேலைகளுக்கான வெற்றிடங்கள் உள்ளதாகவும். அதில் 9,000 தமிழ் இளைஞர்களை பொலிஸ் பிரிவில் சேர்க்க தான் விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார்.

அரச வேலைக்கு 30 ஆயிரம் வெற்றிடங்கள் உள்ளன. குறிப்பாக பொலிஸ் திணைக்களத்தில் அதிகளவான வேலை வாய்ப்புகள் உள்ளன. தமிழ் மொழி மூல பொலிஸ் உத்தியோகஸ்தர்களுக்கான வெற்றிடங்கள் காணப்படுகின்றன. அதனால் பொலிஸ் வேலைக்கு இளையோர் இணைய முன் வர வேண்டும். 

தமிழ் இளைஞர் யுவதிகள் பொலிஸ் சேவையில் இணைய வந்தால் 9 ஆயிரம் பேர் வரை ஆட்சேர்ப்பு செய்ய நடவக்கை எடுக்க முடியும் என்று அனுரா தெரிவித்துள்ளார்..