alien discovered in Antarctica : அன்டாட்டிக்கா பனி மலையில் தெரியும் ஏலியன் உருவம்- Google Earth கண்டு பிடிப்பு

அண்டார்டிகாவின் பனிபடர்ந்த பகுதியில் ஒரு புதிரான முகம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த முகம் ALIEN உயிரினத்தைப் போல காணப்படுவதாக கூகுள் எர்த் மூலம் ஆராய்ச்சி செய்யும் ஒரு வலைப் பயனர் தெரிவித்துள்ளார். இந்த படம் r/strangeearth என்ற ரெடிட் பக்கத்தில் பகிரப்பட்டு, இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த படத்தில், பனியில் ஒரு கண் மூடிய முகம், மூக்கு மற்றும் வாய் போன்ற அம்சங்கள் தெளிவாக காணப்படுகின்றன. இந்த முகம் அண்டார்டிகாவின் தென்கிழக்கு பகுதியில் உள்ள தொலைதூர பிராந்தியத்தில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. கூகுள் மேப்ஸில் 72°00’36.0″S 168°34’40.0″E என்ற நெட்டாங்கு அகலாங்கில் உள்ளது.  

இந்த படத்தை பகிர்ந்த வலைப்பயனர், இது ஒரு ஏலியன் உயிரினத்தின் முகம் போல் தெரிகிறது என்று கூறினார். இதைப் பார்த்த சிலர் இது டிரான்ஸ்ஃபார்மர்ஸ் திரைப்படத் தொடரில் வரும் மெகாட்ரான் என்ற கதாபாத்திரத்தை ஒத்துள்ளது என்றும் கருத்து தெரிவித்தனர்.

ஆனால், இது பரெய்டோலியா (Pareidolia) என்ற உளவியல் நிகழ்வாக இருக்கலாம் என சிலர் கருத்து தெரிவித்தனர். நாசாவின் கூற்றுப்படி, பரெய்டோலியா என்பது முகங்கள் இல்லாத இடங்களில் முகங்களை காணும் ஒரு உளவியல் நிகழ்வாகும். இது மேகங்கள், பாறைகள் அல்லது பிற பொருட்களில் முகங்களை கற்பனை செய்யும் போது ஏற்படுகிறது.

இதே போல ஒரு  படம் 2019-இல் ரெடிட்டில் பகிரப்பட்ட போதே,  கோட்பாட்டாளர்கள் இது அண்டார்டிகா பனியின் கீழ் மறைந்திருக்கும் ஒரு நாகரிகத்தின் சான்று என்று கூறினர். அவர்களின் கூற்றுப்படி, இந்த நாகரிகம் அன்னியர்களால் உருவாக்கப்பட்டதாக இருக்கலாம் என்பதும் அவர்களின் வாதம்.

இந்த கண்டுபிடிப்பு உண்மையில் என்னவென்பதை பற்றிய ஆராய்ச்சி தொடர்கிறது. இதற்கிடையில், இது இயற்கையின் ஒரு புதிரான அம்சமா அல்லது வேறு ஏதேனும் இரகசியமா என்பது குறித்த விவாதங்கள் இணையத்தில் தொடர்கின்றன.

Source : DM-UK