அனுராவுக்கு முன்னால் தனது சொந்தப் பிரச்சனை பற்றி பிரசங்கம் நடத்திய அர்ச்சுணா MP

யாழில் அபிவிருத்திக் கூட்டம் இன்று நடைபெற்றது. மீன் வழத்துறை அமைச்சர் தலைமை தாங்க, சிறப்பு விருந்தினராக ஜனாதிபதி அனுரா வந்திருந்தார். கூட்டம் நடைபெற்ற வேளை, நானும் பேச வேண்டும் என்று எழுந்த அர்ச்சுணா MP, வடக்கு அபிவிருத்தியை பற்றியோ, மீனவர் பிரச்சனை பற்றியோ பேசவில்லை. மாறாக தனது சொந்தப் பிரச்சனையை ஜனாதிபதிக்கு சொல்ல ஆரம்பித்தார். சுமார் 5 நிமிடமாக, எதுவும் பேசாமல் மெளனமாக அனுராவும் இதனை சகித்துக்கொண்டு இருந்தார். 

மருத்துவர் சத்திய மூர்த்திக்கும் அர்ச்சுணாவுக்கும் இடையே முரண்பாடு இருப்பது யாவரும் அறிந்த விடையம். யாழ் போதனா வைத்தியசாலையின் மேலாளராக மருத்துவர் சத்திய மூர்த்தி இருந்து வருகிறார். அவரை அந்தப் பதவியில் இருந்து தூக்க, அர்ச்சுணா முனைப்புக் காட்டி வருகிறார். அதனையே அவர் இன்று அனுரா முன்பாக பேசி தனது வன்மத்தை தீர்த்துள்ளார்.

அர்ச்சுணா போன்ற நபர்களை, யாழ் மக்கள் எப்படி MPயாக தெரிவு செய்தார்கள் என்பது இன்றுவரை புரியாத ஒரு புதிராகவே உள்ளது. அபிவித்திக் கூட்டம் நடைபெறுகிறது. , நாட்டின் ஜனாதிபதியே வந்துள்ளார். தமிழ் மக்களின் குறை நிறைகளை சொல்லி இருக்க நல்ல வாய்ப்பு ! ஆனால் தனது தனிப்பட்ட பிரச்சனையை அவர் பேசி உள்ளார். இவர் போன்ற நபர்களால் தான் தமிழ் இனத்திற்கு விடிவு வரப்போகிறதா ?