8 கோடி மக்களை ஈழத் தமிழர்களுக்கு எதிராக திருப்பி விட்டுள்ள சீமான் !


“”ஊருடன் பகைப்பின் வேருடன் கேடும்”” என்பார்கள். அதாவது நீ ஊரோடு ஒத்து வாழவில்லை என்றால் வேரோடு அழிந்து போய் விடுவாய் என்பதே அதன் பொருள். தமிழ் நாட்டில் சிறு பிள்ளைகள் 5ம் வகுப்பு தொடக்கம் பாட நூலில் படித்து வந்தது பெரியாரைப் பற்றி. தான் பிரபல்யமாகவேண்டும் என்பதற்காக, பெரியாரை அவதூறு பேசியது மட்டும் அல்லாது. தனது சொந்தப் பிரச்சனைக்கு உள்ளே, ஈழத் தமிழர்களையும் கோத்து விட்டுள்ளார் சீமான். 

அவருக்கு ஆதரவாகப் பேசும் ஈழத் தமிழர்கள் யார் ? என்று பார்த்தால், அதிக அளவில் உணர்ச்சி வசப்படுபவர்கள், பகுத்தறிவு சிந்தனை இல்லாதவர்கள், தூர நோக்கு பார்வை இல்லாதவர்கள், மற்றும் பொழுது போக்காக YouTube பார்க்கும் நபர்களே தவிர. அறிவில் சிறந்த எவரும் சீமான் பின்னால் போக மாட்டார்கள். 

சற்று நிதானமாக சிந்தித்துப் பார்த்தால், ஏன் சீமானை ஆதரிக்க வேண்டும் என்ற கேள்வி எழுந்து விடும். புலிகளின் கொடியையும் தேசிய தலைவரையும் நேசிப்பதாக கூறும் இதே சீமான் பெண்களை மதிப்பது இல்லை. கெட்ட வார்த்தை பேசுவதில் வல்லவர். தலைவர் பிரபாகரன் குடும்பத்தையே பொது வெளியில் வைத்து கேவலப்படுத்தியவர். 

100 வருடங்கள் ஆனாலும் சீமானால் தமிழ் நாட்டில், முதல்வர் ஆக முடியாது. அப்படியே நடந்தால் கூட ஈழத் தமிழர்களுக்கு அவரால் என்ன செய்து விட முடியும் ? நடக்க உள்ள ஈரோடு இடைத் தேர்தலில் சீமானின் கட்சி போட்டியிடுகிறது. அவர் இம் முறை டெபாசிட் வாங்குவாரா என்பது கூட தெரியவில்லை. அந்த அளவு தனது பெயரை தானே கெடுத்து. போதாக் குறைக்கு ஈழத் தமிழர்களையும் எதிரியாக்கி விட்டுள்ளார். 

இப்படி இன்னும் எத்தனை பாடங்களை நாம் கற்க்க இருக்கிறோம் ? இன்று தமிழகத்தில் உள்ள அனைத்துக் கட்சிகளும் சீமானை எதிர்கிறது. அவர் ஈழத் தமிழர்கள் மற்றும் தேசிய தலைவர் பிரபாகரனுக்கு பின்னால் கவசம் எடுத்து நிற்கிறார். அதனால் கல் அடி யார் மேல் விழும் என்று தெரியாதா ? இல்லை புரியாதா ? இனியாவது ஒட்டு மொத்த ஈழத் தமிழர்களும் இணைந்து சீமானை புறக்கணிப்போம்.