ஷாப்பிங் சென்டரரைக் கூட பொலிசார் விட்டு வைக்கவில்லை. அமெரிக்காவில் நடக்கும் நிகழ்வுகள் பலரை அதிரவைத்துள்ளது. அங்கே உள்ள பொலிசார் மற்றும் அதிகாரிகள் நடந்து கொள்ளும் விதம் பெரும் அச்சத்தை தோற்றுவித்துள்ளது. அப்பாவுக்கு விசா இருக்கிறது. ஆனால் மகளுக்கு விசா இல்லை என்றால் கூட, உடனே மகளை கைது செய்து, திருப்பி அனுப்ப பொலிசார் முனைகிறார்கள்.
அது போக ஷாப்பிங் சென்ரரில் உள்ள உணவங்களை முற்றுகையிடுவது. அங்கே வரும் அமரிக்கர்கள் அல்லாத பொது மக்களை விசாரித்து விசாவை காட்டவில்லை என்றால் உடனே கைது செய்வது என்று, பல சம்பவங்கள் இடம்பெற்று வருகிறது.
இதனைப் பலர் வீடியோ எடுத்து சமூக வலையத் தளங்களில் பதிவிட்டு வருகிறார்கள். குறிப்பாக அமெரிக்க பொலிசார் லத்தீன் அமெரிக்க நாட்டவர்கள், சீனர்கள், பாக்கிஸ்தானியர்கள், மற்றும் இந்தியர்களை தேடித் தேடி கைது செய்து வருகிறார்கள். அவர்களை கை விலங்கிட்டு விமானத்தில் ஏற்றி அவர்கள் நாட்டுக்கு கொத்துக் கொத்தாக அனுப்பி வருகிறார்கள். இப்படியான ஒரு சம்பவம் நடந்தவேளை எடுக்கப்பட்ட வீடியோ கீழே இணைக்கப்பட்டுள்ளது.
View this post on Instagram