அமெரிக்காவில் ஆண்டு தோறும் நடைபெறும், Super Bowl என்னும் ரக்பி விளையாட்டு உலகப் பிரசித்தி பெற்ற ஒன்று. இதனைக் காண பல லட்சம் அமெரிக்கர்கள் திரண்டு வருவது உண்டு. அதேபோல பல புகழ்பெற்ற நட்சத்திரங்களும் இந்த விளையாட்டுப் போட்டிக்கு வருவது உண்டு. இம் முறை இன் இந்த விளையாட்டு நிகழ்வை, அமெரிக்க அதிபர் டொனால் ரம் ஆரம்பித்து வைத்தார்.
இதேவேளை, நேற்றைய தினம்(09) நடைபெற்ற இந்த விளையாட்டு நிகழ்வில், கிராமி அவாட் வின்னர் பாடகி லிட்ஸ் கறுப்பின தேசிய கீதப் பாடலைப் பாடி ,பெரும் சர்சையைக் கிளப்பியுள்ளார். அமெரிக்காவில் உள்ள New Orleans மாநிலத்தில் அதிக அளவில் கறுப்பின மக்கள் வாழ்கிறார்கள்.
அவர்கள் இயற்றிய பாடலே இந்த கறுப்பின தேசிய பாடல் ஆகும். அடிக்கடி அமெரிக்காவில் கறுப்பின மக்களுக்கு எதிராக பல அடக்கு முறைகள் இன்றுவரை இடம்பெற்று வருகிறது. ஏன் மேலும் சொல்லப் போனால், அமெரிக்க தேர்தலில் கமலா ஹரிசுக்கு வாக்குகள் கிடைக்காமல் போனதற்கு இதுவும் ஒரு காரணம் தான்.
தற்போது நடக்கும் இந்த விளையாட்டு நிகழ்வில், அதிபர் டொனால் ரம்பும் கலந்து கொண்டுள்ள நிலையில், கறுப்பின மக்கள் வாழவேண்டும்(black lives matter) என்ற பொருள்பட அமைந்துள்ள இந்தப் பாடலைப் பாடி பாடகி லிட்ஸ் சர்சையைக் கிளப்பியுள்ளார். தற்போது அமெரிக்க சமூக வலையத் தளங்களில், இந்தப் பாடல், இந்த நேரத்திற்கு அவசியம் தானா ? என்று பலர் விவாதித்து வருகிறார்கள். அதிலும் டொனால் ரம்புக்கு இந்தப் பாடலைக் கேட்டாலே அலர்ஜி.