சிங்களே தேசிய இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் டேன் பிரியசாத், கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார் என எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார். டேன் பிரியசாத் அடிப்படையில் ஒரு இனவாதி. இவர் தமிழர்களுக்கு எதிரான புத்த பிக்குகளின் பல போராட்டங்களை முன் நின்று நடத்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
அவர் இன்று (11) காலை டுபாயில் இருந்து இந்நாட்டிற்கு வந்தபோது கைது செய்யப்பட்டார். 2024 ஆம் ஆண்டு போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரை கைது செய்ய வேண்டாம் என்று நானேரிய பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு அழுத்தம் கொடுத்ததற்காக டேன் பிரியசாத்துக்கு எதிராக நிகவரெடிய குற்றப் புலனாய்வுப் பணியகம் விசாரணை ஒன்றை ஆரம்பித்திருந்ததாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க தெரிவித்தார்.
இது தொடர்பாக, கல்கமுவ நீதவான் நீதிமன்றம் டேன் பிரியசாத்துக்கு எதிராக வெளிநாட்டு பயணத் தடையையும், அவரைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான உத்தரவையும் பிறப்பித்திருந்தது.