Hamas response as Donald Trump threatens: ஹமாஸ், டிரம்பின் எச்சரிக்கைக்கு கடும் பதிலடி, பூச்சாண்டி காட்ட வேண்டாம்

ஹமாஸ், டொனால்ட் டிரம்ப் விடுத்த எச்சரிக்கைக்கு கடுமையாக பதிலளித்துள்ளது. மீதமுள்ள இஸ்ரேலி பணயக் கைதிகளை, சனிக்கிழமைக்குள் விடுவிக்காவிட்டால், ஹமாஸ் இயக்கம் நரகத்தை பார்க வேண்டு இருக்கும் என்று ரம் தெரிவித்து கடுமையான எச்சரிக்கை ஒன்றை விடுத்து இருந்தார்.

ஹமாஸின் பிரதிநிதி, ‘இந்த மாதிரியான அச்சுறுத்தல் மொழிக்கு எந்த இடமும் இல்லை’ என்று தெரிவித்துள்ளார். குறிப்பாக, 14 மாதங்களுக்கு முன் அக்டோபர் 7 தாக்குதலின் போது, 1,100க்கும் மேற்பட்ட இஸ்ரேலியர்களை கொன்று, பலரைக் கடத்தி, பணயக் கைதிகளாக வைத்திருக்கிறது ஹமாஸ் இயக்கம்.

சமீபத்திய அறிக்கையில், ஹமாஸ், பணயக் கைதிகளை, விடுதலை செய்வதை நிறுத்தியது. காரணம் இஸ்ரேல் தொடர்ந்தும் யுத்த நிறுத்தத்தை மீறி வருவதாக அது குற்றம் சாட்டி இருந்தது.

திங்கள்கிழமை இரவு, நிருபர்களிடம் பேசிய டிரம்ப், இறுதி முடிவு இஸ்ரேலின் கையில் இருந்தாலும், ‘என் பார்வையில், சனிக்கிழமை மதியம் 12 மணிக்குள் எல்லா பணயக் கைதிகளும் திரும்பப் பெறப்படாவிட்டால், பேச்சுவார்த்தையை ரத்து செய்ய வேண்டும். பின்னர் கடுமையான நிலைமைகள் உருவாகலாம்’ என்று தெரிவித்தார்.

ஹமாஸின் முக்கிய பேச்சாளர் சாமி அபு சுஹ்ரி, ‘டிரம்பின் கருத்துக்கள் அமைதி பேச்சுவார்த்தைக்கு தடையாக செயல்படுகின்றன’ என்று கூறினார். மேலும், ‘அச்சுறுத்தலுக்கு எந்த மதிப்பும் இல்லை, இது நிலைமையை மேலும் மோசமாக்கும்’ என்று சுஹ்ரி வலியுறுத்தினார்.

அத்துடன், ‘ஒரு ஒப்பந்தம் உள்ளது, இருவரும் அதை மதிக்க வேண்டும். இதுவே சிறைபிடிக்கப்பட்டவர்களை திருப்பி அனுப்பும் ஒரே வழியாகும்’ என்று டிரம்புக்கு நினைவூட்டினார்.