2009ம் ஆண்டு காலப் பகுதியில் ஈழத் தமிழர்களுக்கு பல உதவிகளைச் செய்து வந்தவர் டேவிட் மிலபான். அந்த வேளைகளில் லேபர் கட்சி ஆட்சியில் இருந்தவேளையில் தமிழர்கள் பல தொடர் போராட்டங்களை லண்டனில் நிகழ்த்தி வந்தார்கள்.
அப்போது பிரித்தானியாவின் பாதுகாப்பு அமைச்சராக இருந்தவர் டேவிட் மிலபான். பின்னர் அவருக்கும் அவருடைய சகோதரருக்கும் கட்சிக்குள் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக, டேவிட் மிலபான் அமெரிக்கா சென்று குடியேறிவிட்டார்.
தற்போது பிரித்தானியாவில் மீண்டும் லேபர் கட்சி ஆட்சிக்கு வந்த நிலையில். திறமை மிக்க டேவிட் மிலபானை மீண்டும் கட்சிக்குள் இணைக்கவும், அவருக்கு பதவியை கொடுக்கவும் பிரதமர் கியர் ஸ்டாமர் முனைப்பு காட்டி வருகிறார்.
அந்தவகையில், அமெரிக்காவுக்கான பிரிட்டன் தூதுவராக டேவிட் மிலபானை , நியமிக்க கியர் ஸ்டாமர் முடிவு செய்துள்ளார். ஆனால் அது டொனால் ரம்புக்கு பிடிக்கவில்லை என்று வெள்ளை மாளிகையில் உள்ள ஒரு அதிகாரி, ரகசியமாக கருத்து ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இதனால் டேவிட் மிலபான் நியமனம் குறித்து சர்ச்சை கிளம்பியுள்ளது. மிகவும் திறமையான நபர் ஒருவர், அமெரிக்க தூதுவராக வருவது, ரம்க்கு ஏன் பிடிக்கவில்லை ? ரம் என்ன நினைக்கிறார் என்பது கேள்விக் குறியாகவே உள்ளது.