அமெரிக்காவில் இருக்கும் ஆயிரக் கணக்கான கொலம்பிய நாட்டவர்கள், விசா இல்லாமல் களவாக வாழ்ந்து வருகிறார்கள். இவர்களில் பலரை கைதுசெய்த பொலிசார் அவர்களை கொலம்பியா நாட்டுக்கு திருப்பி அனுப்ப முற்பட்ட வேளை. கொலம்பிய ஜனாதிபதி பெட்ரோ, அவர்களை ஏற்க மறுத்துவிட்டார். அத்தோடு அகதிகளை ஏற்றி வரும் அமெரிக்க விமானத்தை கொலம்பியா நாட்டுக்கு உள்ளே அனுமதிக்க தடை விதித்தார். இதனால் கடுப்பான அமெரிக்க ஜனாதிபதி…
உடனே ஒரு விசேட வர்த்தமானியை அறிவித்தார். கொலம்பியா நாட்டில் இருந்து அமெரிக்கா வரும் பொருட்கள் அனைத்திற்கும் 25% டாக்ஸ் அறவிடப்படும். இதற்கு சம்மதம் என்றால் நீங்கள் தாராளமாக தடையாக இருக்கலாம் என்று கூறினார். இதனால் கொலம்பியா ஜனாதிபதி பெட்ரோ ஆடிவிட்டார். வேண்டாம் எந்த வரியையும் விதிக்கவேண்டாம். நாங்கள் எங்கள் விமானத்தை அனுப்பி, அகதிகளை அழைக்கிறோம் என்று ரம் காலில் மண்டியிட்டுள்ளார்.
அடுத்த நடவடிக்கை பனாமா கல்வாயை அமெரிக்கா கைப்பற்றுவது தான் என்கிறார்கள். அதற்கும் ரம் ஏதாவது ஒரு உக்த்தியை கையில் வைத்திருப்பார் என்று தான் கூறப்படுகிறது. பொறுத்து இருந்து தான் பார்க்கவேண்டும்.