3 சிறு பெண் குழந்தைகளை ஈவு இரக்கம் இன்றிக் கொலைசெய்து. மேலும் சிறுமிகளை கொலை செய்ய முற்பட்டவேளை கைதான Axel Rudakubana என்னும் நபர் 52 வருட சிறைத் தண்டனை பெற்று சிறையில் உள்ளார்.
இந்த நிலையில், சிறையில் வைத்து இந்த நபரை சிலர் தாக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் இதனை உறுதி செய்ய முடியவில்லை. இதேவேளை இன் நபர் குறைந்த பட்சம் 52 வருடம் சிறையில் இருக்க வேண்டும் என்று நீதிபதி கடுமையாக தனது தீர்ப்பில் கூறியுள்ளார்.
இதனால் இவர் வெளியே வரும் போது இவருக்கு வயது 70 ஆக இருக்கும் என்று சிறை காவலர்கள் கருத்து தெரிவித்துள்ளார்கள். பரோலில் வெளிவர கூட தடை விதிக்கப்பட்டுள்ளது.