எங்களில் பலருக்கு தெரியாத மற்றும் உண்மையான விடையம் ஒன்று உள்ளது. எமது கண்கள், அது அமைந்திருக்கும் பகுதி அதன் நாளங்கள், லென்ஸ் அனைத்துமே தன்னை உரு மறைப்பு செய்து தான் வாழ்ந்து வருகிறது. காரணம் எமது உடலில் ரத்தத்தில் உள்ள வெள்ளை அணுக்கள், கண்களை கண்டு பிடித்தால் உடனே தக்கி அதனை கொஞ்சம் கொஞ்சமாக அழிக்க ஆரம்பிக்கும். ஏன் எனில் கண் என்ற உறுப்பு உடலில் உள்ள எனைய திசுக்களை விட மிகவும் மாறுபட்ட ஒன்று.
எனவே ரத்தத்தில் உள்ள வெள்ளை அணுக்கள், உடனே அதனை வைரஸ் என நினைத்து அதன் மீது பாரிய போர் தொடுக்கும். இதன் காரணத்தால் எமது கண் மற்றும் அதனை சூழ்ந்திருக்கும் அனைத்து உறுப்புகளும் தன்னை உருமறைப்புச் செய்து தான் வாழ்ந்து வருகிறது. கண்ணுக்கு ரத்த ஓட்டம் செல்கிறது. ஆனால் வெள்ளை அணுக்கள் அதனை கண்டு பிடிப்பது இல்லை. அப்படி என்றால் கண் எப்படி பாதுகாக்கப்படுகிறது ? என்று நினைப்பீர்கள் அல்லவா ?
கண்ணை தனியா ஒரு சிஸ்டம் பாதுகாத்து வருகிறது. ஆம் கண்ணுக்கு என்று ஒரு தனி பாதுகாப்பு பிரிவு உள்ளது. இதற்குப் பெயர் தான் ocular immune system. நமது உடலில் உள்ள சாதாரண நோய் எதிர்ப்பு சக்தி என்பது, உடலில் வைரஸ் போன்ற ஆபத்தான் உயிரினங்கள் வரும்போது உடனே செயல்பட்டு அழிக்கும். ஆனால் இந்த கண்ணில் காணப்படும் நோய் எதிர்ப்பு சக்த்தி என்பது, எமது உடல் நோய் எதிர்ப்பு சக்த்தி செயல்படும் விதத்தை விட வேகமாக இயங்கக் கூடியது. கண்ணில் காயம் ஏற்பட்டாலோ இல்லை, நோய் தொற்றிக் கொண்டால், சடுதியாக செயல்பட்டு அதனை குணப்படுத்தும். கண் மிக மிக முக்கியமான உறுப்பு, மேலும் சொல்லப் போனால், அது திறந்து இருக்கிறது.
அதனால் இயற்கையாகவே இப்படி ஒரு தனி நோய் எதிர்ப்பு சிஸ்டத்தை கண்ணுக்கு மட்டும் உருவாக்கி வைத்திருக்கிறது. எம்மை படைத்தது இயற்கையா இல்லை கடவுளா இல்லை வேற்றுக் கிரக வாசிகளா தெரியவில்லை. ஆனால் மிகவும் நேர்த்தியாக படைத்துள்ளார்கள்.