பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவுக்கு எதிராக தற்போதுள்ள சட்டத்தின் கீழ் நடவடிக்கைகளை எடுக்குமாறு அனுராதபுரம் நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக பெப்ரவரி 3 ஆம் திகதி நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்குமாறும் அனுராதபுரம் பொலிஸாருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அனுராதபுரம் பகுதியில் போக்குவரத்து பொலிஸாரின் கடமைகளுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் செயல்பட்டதாக பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவுக்கு எதிராக பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதோடு, இது தொடர்பாக அனுராதபுரம் பொலிஸார் நீதிமன்றத்தில் ஆதாரங்களை சமர்ப்பித்திருந்தனர்.
பொலிசார் அர்ச்சுணாவின் வாகனத்தை மறித்தவேளை, இறங்கி வந்த அர்ச்சுணா “நான் யார் தெரியுமா ?” என்று கேட்டு பொலிசாரை மிரட்டியதோடு. சிங்களவர் என்றால் தமிழரை அடக்கலாம், என நினைத்தீர்களா என்று வம்புக் கேள்விகளை கேட்டு தற்போது வசமாக சிக்கியுள்ளார். இவருக்கு எதிராக வீடியோ ஆதரம் உள்ளதாக பொலிசார் தற்போது தெரிவித்துள்ளார்கள்.