யாழில் கடந்த ஆண்டு மட்டும், பல கரு கலைப்புகள் யாழ் போதனா வைத்தியசாலையிலும், பல தனியார் நிலையங்களிலும் நடந்துள்ளது. இதனை கவனத்தில் எடுத்தால், 14 தொடக்கம் 45 வயது வரை உள்ள பெண்கள் இதில் அடங்குவது, பெரும் அதிர்ச்சி தரும் விடையமாக உள்ளது. யாழ்ப்பாணம் – கைதடி பகுதியில் தொப்புள் கொடியுடன் பிறந்த குழந்தையொன்று கிணற்றுக்குள் வீசப்பட்ட சம்பவமொன்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கைதடி முருகமூர்த்தி கோவில் பகுதியில் உள்ள கிணற்றிலேயே குழந்தையின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.கிணற்றுக்குள் குழந்தை இருப்பதை அவதானித்த அப்பகுதி மக்கள் பொலிஸாருக்கு தகவல் வழங்கிய நிலையில், சடலம் மீட்கப்பட்டு வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.குழந்தையின் சடலம் அடையாளம் காணப்படாத நிலையில் சம்பவம் தொடர்பாக சாவகச்சேரி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இருப்பினும் கைதடி நபர் ஒருவர் என்மது செய்தியாளரிடம் தெரிவிக்கையில், இது கள்ளக் காதல் விடையம் என்றும். தாயார் பிள்ளையை பெற்று கிணற்றில் வீசி விட்டுச் சென்று விட்டதாகவும் தெரிவித்துள்ளார். யாழில் ஏது DNA பாங்க் ? இதனால் DNA டெஸ்ட் எடுத்தால் கூட, யாருடைய பிள்ளை என்பதனை கண்டு பிடிப்பதில் பெரும் சிரமம் உள்ளது.