Vivek was pushed out of Trump’s new Department: விவேக் ராமசாமியை ரம் அரசில் இருந்து நீக்கிய எலான் மஸ்க்: இந்தியர்களுக்கு ஆபத்து

டொனால் ரம் பதவி ஏற்க முன்னரே அவரால் ஏற்பாடு செய்யப்பட்ட Department of Government Efficiency (DOGE) திணைக்களத்தில் இருந்து, விவேக் ராமசாமியை தற்போதைய அரசு வெளியேற்றியுள்ளது.  என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. விவேக் ராமசாமி, அமெரிக்க அரசு நிறுவனங்களில் CEO வாக வேலைபார்த்து வந்துள்ளார். மேலும் சொல்லப் போனால் டொனால் ரம் புதிதாக ஆரம்பித்துள்ள Department of Government Efficiency (DOGE) திணைக்களத்திற்கு அவரை தலைவராக நியமித்தும் இருந்தார்.

ஆனால் தற்போது இந்த விடையத்தில் எலான் மஸ்க் தலையிட்டுள்ளார். காரணம் எலான் மஸ்கின் பணத்தின் மூலமே இந்த திட்டம் இயங்க உள்ளது. இதனால் எலான் மஸ்க் இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்தி வருகிறார். அந்த வகையில் எலான் மஸ்க் தெரிவித்த கருத்தால், டொனால் ரம் விவேக்கை, அந்த தலைவர் பதவியில் இருந்து தூக்கியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

காரணம் இந்த H-1B visa என்று கூறப்படுகிறது.  டொனால் ரம் , அகதிகளையும் விசா நிராகரிக்கப்பட்டவர்களையும் கொத்துக் கொத்தாக நாட்டை விட்டு திருப்பி அனுப்ப கட்டளை பிறப்பித்துள்ளார். இதேவேளை விசாவில் வந்த நபர்களையும் அவர்கள் சொந்த நாட்டுக்கு திருப்பி அனுப்ப டொனால் ரம் , ஆராய்ந்து கொண்டு இருக்கிறார். இதனால் தான் விவேக் ராமசாமியை தொடர்ந்து வைத்திருக்க முடியாது என்று அரசு கருதுகிறது. ஏன் என்றால் விவேக் ராமசாமியும் இந்த விசாவில் தான் அமெரிக்காவில் தங்கி இருக்கிறார்.