நேற்றைய தினம்(20) நடைபெற்ற Donald Trump பதவியேற்ப்பு விழாவில் உலகில் உள்ள பல முக்கியமான பில்லியனர்கள் கலந்து கொண்டார்கள். இதில் அம்பானி கலந்துகொள்ளவில்லை. முன்னதாக அம்பானியை ரம் சந்தித்து உரையாடி இருந்தார். முதல் நாள்(19) நடைபெற்ற நிகழ்வில் தான் அம்பானி பங்கேற்று இருந்தார். பதவியேற்ப்பு விழாவில், மிகவும் முக்கியமான ஒரு இடத்தில் அனைத்து பில்லியனர்களையும், ரம்பின் Secret Service படை நிலை நிறுத்தி இருந்தது. அவர்களுக்கு கடும் பாதுகாப்பும் போடப்பட்டு இருந்தது.
இதில் சுந்தர் பிச்சை பலரது கவனத்தை ஈர்த்திருந்தார். அவர் எலான் மஸ் அளவு பெரிய செல்வந்தர் இல்லை. ஆனால் அவர்களுக்கு சரி சமமாக இந்த தமிழன் நின்றுகொண்டு இருந்தார். வீடியோவில் பார்த்தால் தெரியும். உலகின் பல முன்னணி பில்லியணர்கள், சுந்தர் பிச்சை இருக்கும் இடம் தேடி வந்து அவரோடு பேசிச் சென்றுகொண்டு இருந்தார்கள்.
அமெரிக்காவிலும் சரி உலக நாடுகளிலும் சரி, நடைபெறும் முக்கிய நிகழ்வுகளில் தவிர்க முடியாத ஒரு நபராக மாறிவிட்டார் சுந்தர் பிச்சை. அவரது மென்மையான குணமும் இதற்கு ஒரு காரணம். இப்படியான ஒரு பெரிய பதவியில் இருக்கும் கர்வம் அவரிடம் கொஞ்சம் கூட இல்லை என்று தான் சொல்லவேண்டும். தமிழர்களின் பெருமை சுந்தர் பிச்சை !