மகிந்த கொழும்பு வீட்டை காலி செய்ய தயார்- நமால் ராஜபக்ஷ அறிவிப்பு !

கடந்த 2 தினங்களுக்கு முன்னர் , அனுரா ஒரு நிகழ்வில் பேசும் போது மகிந்த இன்னும் அரசாங்க வீட்டில் தான் இருந்து வருவதாகவும். அதற்கான வாடகை 4 கோடி வரை பாக்கி உள்ளது என்றும். அது அறவிடப்படும் எனவும் கூறி இருந்தார். இந்தச் செய்தி காட்டுத் தீ போல இலங்கையில் பரவ ஆரம்பித்தது.

ஏற்கனவே செல்வாக்கை இழந்து ஓரம் கட்டப்பட்டு, இலங்கையில் ஒரு அகதி போல வாழ்ந்து வருகிறார்கள் ராஜபக்ஷ குடும்பத்தினர். இந்த நிலையில் இது என்னடா பெரும் இடியாக இருக்கே என்று மகிந்த நினைத்து விட்டார் போல உள்ளது.

இதனால் மகன் நமாலை கொண்டு உடனடியாக ஒரு செய்தியை வெளியிட்டுள்ளார். அது என்னவென்றால் தான் உடனே வீட்டை காலிசெய்ய தயார் என்றும். கட்ட வேண்டிய வாடகைப் பணத்தை முழுமையாக கட்டுகிறேன் என்றும் மகிந்த கூறியுள்ளார்.