இருந்தாலும் இந்த அளவு ஓவர் கான்பிடன்ஸ் உடம்புக்கு ஆகாது. டொனால் ரம் நேற்றைய தினம் மாலை பதவியேற்றார். அந்த நிகழ்வில் ஜோ பைடனும் கலந்துகொண்டார். அவர்கள் மேடையில் அமர்ந்து இருந்தவேளை, முன் நாள் ஜனாதிபதி ஜோ பைடன் இருக்கும் இடத்தில் இருந்து சுமார் 2 அடி தள்ளி நின்று பேசிய ரம். அங்கே இருந்த ஜோ பைடனை சரமாரியாக தாக்கிப் பேசியுள்ளார்.
இப்படி வரலாற்றில் நடந்ததே இல்லை. வெளியே செல்லும் ஜனாதிபதி பற்றி, உள்ளே வரும் ஜனாதிபதி பேசுவது அதுவும், பதவியேற்ப்பு விழாவில் பேசுவது என்பது முன்னர் எப்பொழுதும் அமெரிக்க வரலாற்றில் நடந்ததே இல்லை. இது தான் முதல் தடவை. அங்கே பேசிய டொனால் ரம், முன்னர் இருந்த அரசு திறமையற்றது.
அவர்களால் சிறு பிரச்சனைகளை கூட கையாளத் தெரியவில்லை என்று, பைடன் அரசை காரசாரமாக திட்டித் தீர்த்துள்ளார். என்ன செய்வது இவர் பேசுவதை எல்லாம் கேட்டுக் கொண்டு தான் இருக்க முடியும் என்ற நிலையில், முன் நாள் ஜனாதிபதி ஜோ பைடனும் கமலா ஹரிசும் அமைதியாக இருந்தார்கள்.