எந்த வகையில் NATO நாடுகள் அமைப்பை தாக்கலாம் என்று தானே ஒரு சூழலை உருவாக்க புட்டின் முனைவதாக ஜேர்மன் ராணுவம் பெரும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதுபோக உக்ரைனில் தாக்கி அழிக்கப்பட்ட பல நூறு கவச வாகங்கள், டாங்கிகளை ரஷ்யா சரிசெய்துள்ளது என்றும். அதற்கு ஈடான கவச வாகங்களை அது புதிதாக படையில் இணைத்துள்ளது என்று ஜேர்மன் மேலும் தெரிவித்துள்ளது. எனவே ரஷ்யா பலம் இழந்து விட்டது என்று எவரும் தப்புக் கணக்கு போட வேண்டாம் என்று ஜேர்மனி கடுமையாக எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது.
ரஷ்ய எல்லைக்கு அருகே உள்ள நாடான போலந்தில் தான், மிகப் பெரிய NATO தளம் உள்ளது. அங்கே பல்லாயிரம் ராணுவத்தினர் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளார்கள். அமெரிக்காவின் பெரிய படை, பிரிட்டன் , பிரான்ஸ் , ஜேர்மனி என்று பல நாட்டுப் படைகள் போலந்தில் நிலைகொண்டு உள்ளது. ரஷ்யா எந்த ஒரு நகர்வை மேற்கொண்டாலும், 4 நிமிடங்களில் ரஷ்யாவை தாக்க ஏதுவான நிலையில், NATO நாட்டுப் படைகள் உள்ளதும் குறிப்பிடத்தக்க விடையம் ஆகும்.