அமெரிக்க வரலாற்றில் அதி கூடிய வயதில் ஜனாதிபதியாகியவர் ஜோ பைடன். அதிலும் அவர் ஆட்சிக்கு வந்து 2 வருடங்களில் அவருக்கு டெமென்ஷியா என்ற ஞாபக மறதி நோய் தொற்றிக் கொண்டது. இதனால் அவர் கடுமையாக பாதிக்கப்பட்டு இருந்த போதும். அவர் பதவி விலகுவார் என்று பார்த்தால் அவர் விலகவில்லை. காலை முதல் மாலை வரை அவர் செய்யவேண்டிய கடமைகளைக் கூட ஜோ பைடன் சரியாக செய்யவில்லை. இன் நிலையில், துணை ஜனாதிபதியாக இருந்த கமலா ஹரிஸ் தலையில் தான் அந்த முழுப் பாரமும் இறங்கியது.
கமலா ஹரிஸ் எந்த ஒரு காழ்ப்புணர்வையும் காட்டாமல், ஜோ பைடன் வேலையையும் தன் வேலை போல எடுத்து செய்து வந்தார். ஜோ பைடன் நாளுக்கு நாள் ஞாபக மறதி நோயால் அவஸ்தைப்பட்டு. என்ன செய்கிறோம் என்று கூட தெரியாமல் செயல்களை செய்து கொண்டு இருந்தார். இந்த நேரத்தில் அடுத்த ஜனாதிபதி தேர்தல் நெருங்கியது. அதில் கமலா ஹரிசை ஜனாதிபதி வேட்ப்பாளராக அறிவிக்கப் போகிறார்கள் என்று அனைவரும் நினைத்தவேளை.
ஆசை யாரைத்தான் விட்டது என்ற கதையாக, ஜோ பைடன் தான் 2ம் தடவை போட்டியிடுவதாக அறிவித்தார். அன்றில் இருந்தே ஜோ பைடனுக்கும் அவரது கட்சியான டெமொகிரட்டிக் பார்டிக்கும் மக்கள் செல்வாக்கு சரியத் தொடங்கியது. இவ்வாறு சில மாதங்கள் ஓட ஆரம்பித்த நிலையில் தான், அக் கட்சிக்கு மக்கள் மத்தியில் செல்வாக்கு குறைகிறது என்பதனைக் கண்டறிந்த பராக் ஒபாமா போன்ற முன் நாள் தலைவர்கள், ஜில் பைடனை சந்தித்து ஜோ பைடனை போட்டியில் இருந்து விலகுமாறு வற்புறுத்தினார்கள்.
ஆனால் ஜோ பைடனை விட, ஜில் பைடனே தனது கணவர் மீண்டும் ஜனாதிபதி ஆகவேண்டும் என்று பெரும் பேராசை கொண்டு இருந்தது அப்போது தான் பல தலைவர்களுக்கு புரிந்தது. இதனால் கட்சி மேலிடம் தலையிட ஆரம்பித்ததால் வேறு வழி இன்றி, தான் விலகிக் கொள்வதாக கடைசி நேரத்தில் ஜோ பைடன் அறிவித்தார். இந்த கடைசி நேரத்தில் இவர்கள் போட்ட வேட்ப்பாளர் தான் கமலா ஹரிஸ். அவர் தான் பலி கடா ஆனார். இருப்பினும் கமலா ஹரிசின் அபார பேச்சுத் திறமையால், அவர் அமெரிக்கா முழுவதும் சூறாவழி சுற்றுப் பயணம் மேற்கொண்டு மேடைகளில் பேசி, மக்கள் ஆதரவை திரட்டினார்.
இதனை பார்த்துக் கொண்டு இருந்த டெஸ்லா கார் உரிமையாளர், மற்றும் ரிவீட்டர் தளத்தை வைத்து உலகையே ஆட்டிப் படைக்கும் எலான் மஸ்க் நேரடியாக களத்தில் குதித்தார். எலான் மஸ்க் வெளிப்படுத்தாவிட்டாலும், அவர் ஒரு இனவாதி தான். அவருக்கு கறுப்பின மக்களை கண்ணில் காட்டக் கூடாது. இதனால் டொனார் ரம் மற்றும் எலான் மஸ்கிற்கும் இடையே நல்ல ஒற்றுமை இருந்து வந்தது. தனது பணம், மற்றும் மீடியா பவரை எலான் மஸ்க் உடனே பாவிக்க ஆரம்பித்தார். அமெரிக்காவில் எங்கே எவர் ரிவீட்டரை திறந்தாலும், அங்கே எல்லாம் ரம்பின் படம் காட்டும் வண்ணம் அவர் செய்தார்.
இதனால் 1% விகிதம் தொடக்கம் 1.5% விகிதத்தால் ரம்பின் செல்வாக்கு உயர்ந்தது. இதன் காரணத்தால் தான் வெறும் 2% சத விகிதத்தால் தான் கமலா ஹரிஸ் தோல்வியடைந்தார். ஆனால் ஜோ பைடன் மற்றும் அவரது மனைவி ஜில் பைடன் ஆகியோரின், பேரசையால் இன்று நிர்கதியாகி நிற்கிறார் கமலா ஹரிஸ். அடுத்த முறை நடக்கும் ஜனாதிபதி தேர்தலில் அவருக்கு சீட் இருக்கா இல்லையா என்பது கூட தெரியவில்லை. ஒரு பலிகடாவாக மாறி பரிதாபமான சூழ் நிலையில் இன்று இருக்கிறார். கமலா ஹரிஸ்.