அனுரா அதிரடி அறிவிப்பு: மகிந்த 4 கோடி ரூபா வீட்டு வாடகை கட்ட வேண்டும்

முன் நாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, 4 கோடியே 60 லட்சம் ரூபா வாடகையாக செலுத்த வேண்டும் என்று அனுரா அறிவித்துள்ளார். கொழும்பில் அரசாங்க வீடு ஒன்றை மகிந்த கைவசப்படுத்தி வைத்திருக்கிறார் என்றும். பல வடங்களாக அவர் வாடகை கட்டவில்லை என்றும் அனுரா, பொது வெளியில் அறிவித்துள்ளார். 

அரசாங்கமே இதற்கு வாடகையை செலுத்தி வருகிறது என்றும். ஊழல் அற்ற அரசை நான் நிச்சயம் இலங்கையில் கொண்டு வருவேன் என மக்களுக்கு வாக்குறுதி கொடுத்து இருந்தேன். இதற்கு அமைவாகவே இந்த நடவடிக்கையை நான் எடுத்துள்ளேன் என்று மேலும் தெரிவித்தார் அனுரா.

தற்போது இந்த வீட்டுக்கு என்ன வாடகையோ, அதே அளவு கணக்கிட்டு, மகிந்த எத்தனை வருடம் அந்த வீட்டை பாவித்துள்ளார் என்று பார்த்தால், மகிந்த 4 கோடிக்கு கிட்ட வாடகைப் பணம் கட்ட வேண்டி இருக்கிறது என்று அனுரா தெரிவித்துள்ளார்.