உலகை ஆளப் போகும் ரோபோக்கள் மனித குமலே அடிமையாகும் நிலை தோன்றும் !

நான் நீ என்று போட்டி போட்டுகொண்டு, பல நாடுகள் ரோபோக்களை உருவாக்கி வருகிறது. அதிலும் ரோபோக்கள் எனப்படும், மனித இயல்புகளை கொண்ட ரோபோக்களை பல நாடுகள் உருவாக்கி வருகிறது. இவை மனிதர்களின் இருப்பையே பெரும் கேள்விக் குறியாக்க உள்ளது. காரணம் என்னவென்றால். குறித்த ரோபோக்களுக்கு , சுயமாக சிந்திக்கும் அறிவை கொடுக்கிறார்கள். 

நான் நீ என்று போட்டி போடும் நாடுகள், மேலும் மேலும் அறிவாற்றல் உள்ள ரோபோக்களை தயாரிக்க ஆரம்பித்துள்ளார்கள். ஏற்கனவே ஏ.ஐ வந்து விட்டதால் பலரது வேலை கேள்விக் குறியாக உள்ளது. 10 பேர் செய்யும் வேலையை ஏ.ஐ தனி ஆளாக செய்கிறது. இதனால் லண்டனில் உள்ள பாக்கிளேஸ் வங்கி 1,400 பேரை வேலையால் நிறுத்தி உள்ளது. இப்படி பல நிறுவனங்கள் நளுக்கு நாள் மனிதர்களை வேலையால் நிறுத்தி ஏ.ஐ தொழில் நுட்ப்பத்தை அறிமுகம் செய்து வருகிறார்கள்.

இவர்கள் தயாரிக்கும் ஏதோ ஒரு ரோபோ தன்னிச்சையாக எப்பொழுது சிந்திக்க ஆரம்பிக்கிறதோ அன்று பெரும் சிக்கல் தோன்றும். மனித குலமே அழியும் நிலை தோன்றலாம் , என்று எச்சரிக்கிறார்கள் அறிஞர்கள்.