Breaking News: Hamas releases hostages பரபரப்புக்கு மத்தியில் 3 பெண்களை விடுதலை செய்த ஹமாஸ்

சற்று முன்னர் பெரும் பரபரப்புக்கு முன்னர் 3 பணயக் கைதிகளை ஹமாஸ் இயக்கம் விடுவித்துள்ளது. இவர்கள் மூவரும் சுமார் 470 நாட்கள் ஹமாஸ் பிடியில் சிறையில் இருந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களில் ஒரு பெண் பிரிட்டனைச் சேர்ந்தவர். குறித்த 3 பெண்களையும் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம், பொறுப்பெடுத்து , அவர்களை உரிய நாட்டுக்கு அனுப்பி வைக்க உள்ளது. 

எமிலி(28) பிரித்தானியாவைச் சேர்ந்தவர், றோமி(24) மற்றும் டோறோன்(31) என்ற 3 பெண்களை ஹமாஸ் விடுதலை செய்துள்ளது. நூற்றுக்கும் அதிகமான ஹமாஸ் ஆயுததாரிகள், ஒரு இடத்தில் குவிந்து ஆர்பரித்தார்கள். இதில் பாலஸ்தீன மக்களும் இணைந்து கொண்டார்கள். பின்னர் அந்த இடத்திற்கு ஒரு வெள்ளை வேன் வந்து நின்றது. அதில் இருந்து 3 பெண் பணயக் கைதிகளை ஹமாஸ் அமைப்பு கீழே இறக்கியது.

பெரும் பதற்றமான சூழ் நிலை காணப்பட்டது. அங்கே வந்த Red-Cross  உறுப்பினர்கள் உடனடியாக அந்தப் பெண்களை வாகனத்தில் ஏற்றிக் கொண்டு அங்கிருந்து சென்றுவிட்டார்கள். சில தினங்களுக்கு முன்ன, ஹமாஸ் மற்றும் இஸ்ரேலுக்கு இடையே யுத்த நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை பாலஸ்தீன மக்கள் ஒரு வெற்றியாகப் பார்கிறார்கள்.  கீழே வீடியோ இணைப்பு.