Russian army exposed: ரஷ்ய ராணுவத்தில் சேர்ந்த “பாபு” உக்ரைனில் இறந்து போன சோகம்

கேரளாவின் திருச்சூர் பகுதியைச் சேர்ந்த பினில் பாபு, ரஷ்ய இராணுவத்தின் சார்பில் போராடிய போது உயிரிழந்தார் என்று உறுதிப்படுத்தப்பட்ட தகவல் வெளியிடப்பட்டுள்ளது. அவரது குடும்பத்தினர் திங்கள்கிழமையன்று இதனை உறுதிப்படுத்தினர்.இந்த செய்தி வெளியானதற்கு முன், ரஷ்யா-உக்ரைன் போரில் கேரளாவைச் சேர்ந்த இன்னொரு இந்தியர் காயமடைந்தார் என்றும் அவர் மாஸ்கோவில் சிகிச்சை பெற்று வருகிறார் என்றும் தகவல்கள் வெளியாயின.

இந்தியர்கள், குறிப்பாக மலையாளிகள், ரஷ்யா-உக்ரைன் போரில் கலந்துகொள்வது தொடர்பாக சமூக ஊடகங்களில் விவாதங்கள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இந்த சம்பவம் இந்தியாவின் வெளிநாட்டு குடியுரிமை மற்றும் பாதுகாப்பு தொடர்பான கேள்விகளை எழுப்பியுள்ளது. இந்தியா தொடர்ந்து ரஷ்யா-உக்ரைன் போரில் தன்னிச்சையான நிலைப்பாட்டைக் கொண்டுள்ள நிலையில், இந்த சம்பவம் இந்தியர்களின் பங்களிப்பு குறித்து புதிய சர்ச்சைகளை தூண்டியுள்ளது.

இந்திய அரசின் அதிகார செய்திக் குறிப்பில், 12 இந்தியர்கள் ரஷ்ய ராணுவத்தில் இருந்து இறந்துள்ளதாகவும். மொத்தமாக 126 பேர் வலுக்கட்டாயமாக ரஷ்ய ராணுவத்தில் சேர்கப்பட்டு, அவர்களில் 96 பேர் நாடு திரும்பியுள்ள நிலையில். மேலும் 18 பேரை காணவில்லை, அவர்கள் இறந்து இருக்கக் கூடும் என்றும் கூறப்படுகிறது.