Ajithkumar Racing: கார் ரேஸில் அஜித்தின் அடுத்த டார்கெட் எந்த நாடு தெரியுமா?

 துபாய் கார் ரேஸில் 3வது இடம் பிடித்த அஜித் அணி அடுத்ததாக பிரபல சுற்றுலா நாடான இத்தாலியில் நடைபெறும் ரேஸில் பங்கேற்கிறார். 

கார் ரேஸில் ஆர்வம் காட்டும் அஜித் இந்த ஆண்டு அக்டோபர் வரை நடைபெறவுள்ள ஜிடி 3 ரக கார் பந்தயத்தில் பங்கேற்க உள்ளாதால், திரைப்படங்களில் நடிக்க போவதில்லை என்று அறிவித்திருந்தார். அஜித்குமார் என்ற கார் ரேஸின் அணியை உருவாக்கியுள்ள அஜித் முதல் துபாயில் நடந்த கார் ரேஸில் பங்கேற்று மூன்றாவது இடத்தை பிடித்தார். அஜித் அணி 3வது இடத்தை பிடித்ததை அவரது ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடினர். 

கார் ரேஸில் வெற்றிப்பெற்றதும் அஜித், இந்திய தேசியக் கொடியுடன் வலம் வந்த காட்சியை ரசிகர்கள் டிரெண்டாக்கி வந்தனர். துபாய் ரேஸ் தொடர்ந்து பேட்டியளித்த அஜித், ரசிகர்கள் நலமுடன் இருக்க வேண்டும் என்றும், நீங்க எப்படி வாழ போறீங்க என்று கேட்டு அட்வைஸ் கொடுத்தார். துபாய் கார் ரேஸால் டிரெண்டிங்கில் இருக்கும் அஜித்குமார் அடுத்ததாக எந்த நாட்டில் கார் ரேஸில் பங்கேற்க போகிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. 

அதிகம் சுற்றுலா பயணிகளை ஈர்க்க கூடிய இத்தாலி நாட்டில் உள்ள முகெல்லோ நகரில் மார்ச் மாதம் 22, 23ம் தேதிகளில் கார் ரேஸ் நடைபெறுகிறது. இதில் பங்கேற்க அஜித் தீவிர பயிற்சி எடுத்து வருகிறார். இதை தொடர்ந்து ஏப்ரல் மாதத்தில் பெல்ஜியமில் நடைபெறும் கார் ரேஸிலும் நடிகர் பங்கேற்க உள்ளதாக கூறப்படுகிறது.