புட்டின் அரசை பிடிக்காமல், மேலும் அவருடன் இருந்து விட்டு விலகிய நபர்கள், முன்னாள் உளவாளிகள், ராணுவ அதிகாரிகள், யாராக இருந்தாலும் சி.ஐ.ஏ தொடர்பு கொண்டு புட்டின் தொடர்பாக தகவல்களை சொல்லலாம் என சி.ஐ.ஏ பகிரங்கமாக அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளது. இதற்கு தக்க சன்மானம் வழங்கப்படும் எனவும் அது மேலும் அறிவித்துள்ளது.
சமீபத்தில் சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்ட ஒரு புதிய வீடியோ, புடினின் ஆட்சியில் உள்ள “உயர் தலைமைகள்” குறித்து உள்ள தகவல்களைப் பகிர்ந்து கொள்ள, தூதர்கள், விஞ்ஞானிகள், மற்றும் உயர் தொழில்நுட்ப நிபுணர்களையும் அழைக்கிறது. இந்த வீடியோவில், புடினின் ஆட்சியில் இருந்து விலகி, சிஐஏ-யுடன் கம்யூனிகேட் செய்யும் ஒரு கற்பனை ரஷ்யரை மையமாகக் கொண்டு செய்தி சித்தரிக்கப்பட்டுள்ளது. அந்த தகவல்களை பகிர்வதற்காக அனானிமஸ் டோர் இன்ஃபர்மேஷன் சிஸ்டம் என்ற பாதுகாப்பான முறையை பயன்படுத்த சிஐஏ பரிந்துரைக்கிறது.
சிஐஏ வெளியிட்ட செய்தியில், “ரஷ்யர்கள் பல்வேறு சூழல்களால் நம்முடன் தொடர்பு கொள்ள முடிவு செய்திருக்கலாம் என்பதை நாம் புரிந்துகொள்கிறோம். நம்முடன் தொடர்பு கொள்ள நினைப்பவர்களை நாங்கள் மதிக்கிறோம் மற்றும் அவர்களைப் பாதுகாப்பது எங்களின் தொழில்முறை கடமையாகும்” என குறிப்பிடப்பட்டுள்ளது.
புடினுக்கு இது பெரும் அதிர்ச்சியையும் ஆத்திரத்தையும் ஏற்படுத்தும். “துரோகிகளை” கடுமையாக எதிர்க்கும் புடின், சில சமயங்களில் அவர்களுக்கு உளவுத்துறை மரண தண்டனைகளையும் அறிவித்துள்ளார். இதற்கான உதாரணமாக, 2018 இல் செர்கே ஸ்கிரிபால் மீதான நவிச்சோக் தாக்குதல் குறிப்பிடப்படுகிறது.